எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் நெருக்கடியை முன்னெச்சரிக்கையாகக் கையாளுவதற்கு அரசாங்கம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையைப் பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், இன்றைய தினம் பொதுப் போக்குவரத்தில் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்திற்கு அமைய, போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும் சிக்கன நடவடிக்கையாக இன்று புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இன்றைய தினம் பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் கணிசமான அளவு மட்டுப்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
அரசுத் துறைக்கு விடுமுறை வழங்கப்பட்ட போதிலும், நாட்டின் பெரும்பாலான தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இன்று வழமை போல் இயங்கியுள்ளன.
இதனால், தனியார் துறையைச் சேர்ந்த பெருமளவிலான ஊழியர்கள் இன்று காலை பணிக்குச் செல்வதற்காகப் பஸ் நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் திரண்டிருந்தனர்.
சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், குறைந்தளவிலான பஸ்கள் மற்றும் ரயில்களே இயக்கப்பட்டமையால், அவற்றில் அதிகளவிலான பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
இதனால் அரசினால் எதிர்பார்க்கப்பட்ட போக்குவரத்து நெரிசல் குறைப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகிய இலக்குகள், தனியார் துறையின் தொடர்ச்சியான இயக்கம் காரணமாக இன்றைய தினம் சவாலுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
புதன்கிழமை பொது விடுமுறை: தனியார் துறையினரால் போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவித்த பயணிகள் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய எரிபொருள் நெருக்கடியை முன்னெச்சரிக்கையாகக் கையாளுவதற்கு அரசாங்கம் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமையைப் பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ள நிலையில், இன்றைய தினம் பொதுப் போக்குவரத்தில் பயணிகள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.அரசாங்கத்தின் இந்தத் தீர்மானத்திற்கு அமைய, போதியளவு எரிபொருள் கையிருப்பில் உள்ள போதிலும் சிக்கன நடவடிக்கையாக இன்று புதன்கிழமை விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், இன்றைய தினம் பொதுப் போக்குவரத்துச் சேவைகளும் கணிசமான அளவு மட்டுப்படுத்தப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.அரசுத் துறைக்கு விடுமுறை வழங்கப்பட்ட போதிலும், நாட்டின் பெரும்பாலான தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் இன்று வழமை போல் இயங்கியுள்ளன. இதனால், தனியார் துறையைச் சேர்ந்த பெருமளவிலான ஊழியர்கள் இன்று காலை பணிக்குச் செல்வதற்காகப் பஸ் நிலையங்களிலும், ரயில் நிலையங்களிலும் திரண்டிருந்தனர்.சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டிருந்த நிலையில், குறைந்தளவிலான பஸ்கள் மற்றும் ரயில்களே இயக்கப்பட்டமையால், அவற்றில் அதிகளவிலான பயணிகள் முண்டியடித்துக் கொண்டு பயணிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.இதனால் அரசினால் எதிர்பார்க்கப்பட்ட போக்குவரத்து நெரிசல் குறைப்பு மற்றும் எரிபொருள் சிக்கனம் ஆகிய இலக்குகள், தனியார் துறையின் தொடர்ச்சியான இயக்கம் காரணமாக இன்றைய தினம் சவாலுக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.