• Mar 10 2026

நாட்டில் நிலவும் வானிலை மாற்றம்; மக்களுக்கு வந்த அறிவுறுத்தல்

Chithra / Jan 20th 2026, 8:00 am
image


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

 

வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, 


நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன. 

 

மேலும் மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற, வறண்ட வானிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

அதிகாலை வேளையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோ மீற்றர்  வேகத்தில்  வடகிழக்குத் திசையில் இருந்து வட திசையை நோக்கி காற்று வீசும். 


மன்னார் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 - 50 கிலோ மீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் 


நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

நாட்டில் நிலவும் வானிலை மாற்றம்; மக்களுக்கு வந்த அறிவுறுத்தல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் நாட்களில் வறட்சியான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.  வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள வானிலை முன்னறிவிப்பின்படி, நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் துகள் உறைபனி ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றன.  மேலும் மேல், சபரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  நாட்டின் ஏனைய பெரும்பாலான பகுதிகளில் மழையற்ற, வறண்ட வானிலையே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  அதிகாலை வேளையில் நிலவும் பனிமூட்டம் காரணமாக வாகனங்களைச் செலுத்தும் சாரதிகள் மற்றும் பொதுமக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.கடல் பிராந்தியங்களில்  மணித்தியாலத்திற்கு 25 - 35 கிலோ மீற்றர்  வேகத்தில்  வடகிழக்குத் திசையில் இருந்து வட திசையை நோக்கி காற்று வீசும். மன்னார் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான அத்துடன் மாத்தறை தொடக்கம் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45 - 50 கிலோ மீற்றரிலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

Advertisement

Advertisement

Advertisement