"சூழ்ச்சிகள் மூலம் ஆட்சியைத் தக்கவைக்கும் எண்ணம் இல்லை. மக்கள் எம்மை நிராகரித்தால் ஆட்சியைக் கைவிடுவதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை."
இவ்வாறு ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
"நாங்கள் சுயநலமாக எதையாவது அடைந்து கொள்வதற்காக ஆட்சிக்கு வரவில்லை. நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவே வந்துள்ளோம். இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாகும். எனவே, மக்கள் எங்களை நிராகரிப்பார்களாயின் நாங்கள் ஆட்சியில் தொடர வேண்டிய அவசியம் இல்லை.
கொள்ளையில் ஈடுபட்டவர்கள், சுயலாபம் தேடியவர்கள் மற்றும் மோசடிகளை மூடிமறைக்க முற்பட்டவர்களே மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க முயற்சிப்பார்கள். நாங்கள் அவ்வாறல்லர்.
விசாரணைகளில் இருந்து தப்புவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. நாட்டுக்குச் சேவையாற்ற வந்துள்ள எமக்கு அவ்வாறான தேவைப்பாடுகள் இல்லை. அத்துடன், தேசிய மக்கள் சக்திக்கும், ஜே.வி.பி.க்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளன என்று வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை." - என்றார்.
சூழ்ச்சியால் ஆட்சியை தக்கவைக்க மாட்டோம் - ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா உறுதி "சூழ்ச்சிகள் மூலம் ஆட்சியைத் தக்கவைக்கும் எண்ணம் இல்லை. மக்கள் எம்மை நிராகரித்தால் ஆட்சியைக் கைவிடுவதில் எமக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை."இவ்வாறு ஜே.வி.பி.யின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்தார்.இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-"நாங்கள் சுயநலமாக எதையாவது அடைந்து கொள்வதற்காக ஆட்சிக்கு வரவில்லை. நாட்டில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தவே வந்துள்ளோம். இது மக்களால் உருவாக்கப்பட்ட அரசாகும். எனவே, மக்கள் எங்களை நிராகரிப்பார்களாயின் நாங்கள் ஆட்சியில் தொடர வேண்டிய அவசியம் இல்லை.கொள்ளையில் ஈடுபட்டவர்கள், சுயலாபம் தேடியவர்கள் மற்றும் மோசடிகளை மூடிமறைக்க முற்பட்டவர்களே மக்களால் நிராகரிக்கப்பட்ட பின்னரும் அதிகாரத்தில் ஒட்டிக்கொண்டிருக்க முயற்சிப்பார்கள். நாங்கள் அவ்வாறல்லர்.விசாரணைகளில் இருந்து தப்புவதற்காகவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து வருகின்றன. நாட்டுக்குச் சேவையாற்ற வந்துள்ள எமக்கு அவ்வாறான தேவைப்பாடுகள் இல்லை. அத்துடன், தேசிய மக்கள் சக்திக்கும், ஜே.வி.பி.க்கும் இடையில் முரண்பாடுகள் உள்ளன என்று வெளிவரும் தகவல்களில் எவ்வித உண்மையும் இல்லை." - என்றார்.