எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் QR குறியீட்டு முறைமையை புதிதாகக் கொணடு வாருங்கள். உங்களால் அது முடியாது என்றால் காஞ்சனவைக் கூப்பிடுங்கள். சம்பளம் இல்லாமல் செய்து தருவார் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் எழுந்துள்ளன.
ஏற்கனவே QR குறியீடு இருந்த ஒரு வாகனம் மற்றும் அதன் தொலைபேசி இலக்கம் மாறாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில், எந்தவித சிக்கலுமின்றி அதே QR குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள்.
ஆனால் வாகனம் ஒன்றாகவே இருந்தாலும் அதன் தொலைபேசி இலக்கம் புதிதாக மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில், புதிய QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ள சிரமமப்படுகின்றனர்.
அத்துடன் புதிய வாகனங்களை கொள்வனவு செய்தவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள், வாகனத்தின் முந்தைய உரிமையாளரின் QR குறியீடு நீக்கப்படாததால் தற்போது வாகனம் வைத்திருப்பவர்களுக்கு QR குறியீடு பெறமுடியாமலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன.
இவை அனைத்திற்குமான ஒரே தீர்வு முன்னர் இருந்த QR குறியீட்டு முறைமையை மாற்றி தற்போது புதிதாக ஒரு முறைமை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை உங்களால் செய்ய முடியாது எனில் காஞ்சனவை கூப்பிடுங்கள். சம்பளம் இல்லாமல் உங்களுக்கு செய்து தருவார் என சாமர சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.
புதிய QR முறைமை வேண்டும்; உங்களால் முடியாது என்றால் காஞ்சனவைக் கூப்பிடுங்கள் சாமர சம்பத் எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் QR குறியீட்டு முறைமையை புதிதாகக் கொணடு வாருங்கள். உங்களால் அது முடியாது என்றால் காஞ்சனவைக் கூப்பிடுங்கள். சம்பளம் இல்லாமல் செய்து தருவார் என பாராளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தெரிவித்துள்ளார். பாராளுமன்றில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருளைப் பெற்றுக்கொள்வதற்காகப் பயன்படுத்தப்படும் QR குறியீடு தொடர்பான பெரும்பாலான சிக்கல்கள் எழுந்துள்ளன. ஏற்கனவே QR குறியீடு இருந்த ஒரு வாகனம் மற்றும் அதன் தொலைபேசி இலக்கம் மாறாமல் இருக்கும் சந்தர்ப்பங்களில், எந்தவித சிக்கலுமின்றி அதே QR குறியீட்டைப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் வாகனம் ஒன்றாகவே இருந்தாலும் அதன் தொலைபேசி இலக்கம் புதிதாக மாற்றப்பட்ட சந்தர்ப்பங்களில், புதிய QR குறியீட்டைப் பெற்றுக்கொள்ள சிரமமப்படுகின்றனர். அத்துடன் புதிய வாகனங்களை கொள்வனவு செய்தவர்கள் எதிர்நோக்கிய சிக்கல்கள், வாகனத்தின் முந்தைய உரிமையாளரின் QR குறியீடு நீக்கப்படாததால் தற்போது வாகனம் வைத்திருப்பவர்களுக்கு QR குறியீடு பெறமுடியாமலும் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. இவை அனைத்திற்குமான ஒரே தீர்வு முன்னர் இருந்த QR குறியீட்டு முறைமையை மாற்றி தற்போது புதிதாக ஒரு முறைமை நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை உங்களால் செய்ய முடியாது எனில் காஞ்சனவை கூப்பிடுங்கள். சம்பளம் இல்லாமல் உங்களுக்கு செய்து தருவார் என சாமர சம்பத் மேலும் தெரிவித்துள்ளார்.