• Aug 26 2026

நீர்தர சோதனை வெற்றி; கொழும்பு, கம்பஹாவில் மீண்டும் குடிநீர் விநியோகம்

Chithra / Aug 25th 2026, 10:21 am
image


 

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான பகுதிகளுக்கு மீண்டும் குடிநீர் வழங்கல் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது.

 

அம்பத்தளை மற்றும் களனி வலது கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் வழங்கும் களனி கங்கை நீரெடுப்பு பகுதிகளில் நீரின் தரம் தொடர்பாக எழுந்த சந்தேகங்களைத் தொடர்ந்து, முப்படையினரின் உதவியுடன் நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது.


இதற்கு முன்னர், களனி கங்கையிலிருந்து பெறப்படும் நீரின் தரம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற அவசர நிலைமை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மையத்தின் ஆலோசனைக்கு அமைவாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.


நீர்தர பரிசோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


எனினும், பத்தரமுல்லை, கோட்டை மற்றும் பமங்கட பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை முழுமையாக மீளமைப்பதில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

நீர்தர சோதனை வெற்றி; கொழும்பு, கம்பஹாவில் மீண்டும் குடிநீர் விநியோகம்  கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் நீர் விநியோகம் பாதிக்கப்பட்டிருந்த பெரும்பாலான பகுதிகளுக்கு மீண்டும் குடிநீர் வழங்கல் வழமைக்குத் திரும்பியுள்ளதாக தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை (NWSDB) தெரிவித்துள்ளது. அம்பத்தளை மற்றும் களனி வலது கரை நீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கு நீர் வழங்கும் களனி கங்கை நீரெடுப்பு பகுதிகளில் நீரின் தரம் தொடர்பாக எழுந்த சந்தேகங்களைத் தொடர்ந்து, முப்படையினரின் உதவியுடன் நீர் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக சபை குறிப்பிட்டுள்ளது.இதற்கு முன்னர், களனி கங்கையிலிருந்து பெறப்படும் நீரின் தரம் பாதிக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற அவசர நிலைமை காரணமாக, அனர்த்த முகாமைத்துவ மையத்தின் ஆலோசனைக்கு அமைவாக கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களின் பல பகுதிகளில் நீர் விநியோகம் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தது.நீர்தர பரிசோதனைகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் நீர் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், பத்தரமுல்லை, கோட்டை மற்றும் பமங்கட பகுதிகளுக்கு நீர் விநியோகத்தை முழுமையாக மீளமைப்பதில் சில தாமதங்கள் ஏற்படக்கூடும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement