• May 10 2026

யாழ்.போதனாவில் தீ விபத்து சதியா? அமைச்சர் சந்திரசேகர் கருத்து!

shanu / May 9th 2026, 4:00 pm
image

யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் களஞ்சியத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இழப்பு பல ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும். எனினும்  நோயாளருக்கான மருத்துவ சேவையில் பாதிப்புகள் ஏற்படாது. மருந்து தட்டுப்பாடுகளும் ஏற்படாது என கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். 


தீப்பிடித்து எரிந்த  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்  மருத்துவ களஞ்சிய தொகுதியைப் பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்  இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 



இந்த அனர்த்தம் எமது மக்களுக்கு பேரிழப்பாகும். இது தற்செயல் நிகழ்வோ அன்றி ஏதாவது சதியோ என்று பலவாறான கோணங்களில் ஆராயப்படுகின்றது. 


ஆனாலும் இது சதிச் செயலாக இருக்காது என நம்புகின்றேன். தற்போது துறைசார் தரப்பினரது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் துறைசார் அமைச்சுக்கு தெரியப்படுத்தி தேவையான மருந்துப் பொருட்களை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

யாழ்.போதனாவில் தீ விபத்து சதியா அமைச்சர் சந்திரசேகர் கருத்து யாழ் போதனா வைத்தியசாலையின் மருத்துவக் களஞ்சியத்தில் தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இழப்பு பல ஆயிரம் கோடிக்கும் அதிகமாக இருக்கும். எனினும்  நோயாளருக்கான மருத்துவ சேவையில் பாதிப்புகள் ஏற்படாது. மருந்து தட்டுப்பாடுகளும் ஏற்படாது என கடற்றொழில் அமைச்சர் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். தீப்பிடித்து எரிந்த  யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின்  மருத்துவ களஞ்சிய தொகுதியைப் பார்வையிட்ட பின் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையில்  இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த அனர்த்தம் எமது மக்களுக்கு பேரிழப்பாகும். இது தற்செயல் நிகழ்வோ அன்றி ஏதாவது சதியோ என்று பலவாறான கோணங்களில் ஆராயப்படுகின்றது. ஆனாலும் இது சதிச் செயலாக இருக்காது என நம்புகின்றேன். தற்போது துறைசார் தரப்பினரது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இந்த சம்பவம் தொடர்பில் துறைசார் அமைச்சுக்கு தெரியப்படுத்தி தேவையான மருந்துப் பொருட்களை கொண்டுவர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

Advertisement

Advertisement

Advertisement