• Feb 15 2026

கடும் மழை தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை; காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கலாம்!

Chithra / Dec 31st 2025, 8:22 am
image


 

வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. 

 

மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும். 

 

ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். 

  

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km  வேகத்தில் வட திசையில் இருந்து வடகிழக்குத் திசையை நோக்கி காற்று வீசும்.


புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான  கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45  km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு  கொந்தளிப்பாகக் காணப்படும்.


ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.


இடியுடன் கூடிய மழைபெய்யும் வேளைகளில் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.


கடும் மழை தொடர்பில் இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை; காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கலாம்  வடக்கு, கிழக்கு, மத்திய, வடமத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களில் இன்று அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.  மத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மிதமான மழை பெய்யக்கூடும்.  ஏனைய பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.   கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 30 - 40 km  வேகத்தில் வட திசையில் இருந்து வடகிழக்குத் திசையை நோக்கி காற்று வீசும்.புத்தளம் தொடக்கம் கொழும்பு ஊடாக காலி வரையான  கரையோரத்திற்கு அப்பால் உள்ள கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 45  km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு  கொந்தளிப்பாகக் காணப்படும்.ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.இடியுடன் கூடிய மழைபெய்யும் வேளைகளில் ஏற்படும் ஆபத்துகளைக் குறைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.

Advertisement

Advertisement

Advertisement