• May 02 2026

கூலியா ? காணியா? உழைப்பாளர் தினத்தில் தீர்மானம் எடுப்போம்- திலகராஜா தெரிவிப்பு!

Ziya / May 1st 2026, 1:02 pm
image

கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்பதாக 'கூலி' எனும் நாமத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு  அழைத்து வரப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் இன்று தம்மை  'மலையகத் தமிழர்கள்' எனும் தனித்துவமான தேசிய இனமாக இலங்கையில் நிறுவிக் கொண்டாலும், அதனை ஏற்றுக் கொள்வதில் இலங்கையின் அதிகார வர்க்கத்துக்கு இருக்கும் 'தயக்கம்' மிக நுணுக்கமாக அவதானிக்கப்பட வேண்டியது என  மலையக அரசியல் அரங்கம் செயலதிபர்   மயில்வாகனம் திலகராஜா  தெரிவித்துள்ளார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,


இலங்கையில் வாழ்கின்ற மலையகத் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகள் பலவாயினும் அவற்றுள் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலார்களின் நாட்'கூலி' கோரிக்கையை மாத்திரமே பிரதானப்படுத்திக் காட்ட முற்படும் போக்கு, அதனைப் பெற்றுக் கொடுப்பதையே பெரும் சாதனையாகக் காட்டும் போக்கு, இந்த மக்களை இந்த நாட்டில் 'கூலி' களாகவே வைத்துக்கொள்வதற்கு  அதிகார வர்க்கம்  கையாளும் கைங்கரியமாகும்.


அதிகார வர்க்கத்தின் இந்த இந்த நரித்தனத்தை முறியடிக்க, 


'கூலியா? காணியா?' எனும் திடமான தீர்மானத்தை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றவும் அதனை வென்றெடுக்கவும் 


"உழைப்பைப் புதியவழிகளில் ஒழுங்கமைப்பதற்காக ஏதேனுமொரு நாள் தொழிலாளி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியாக வேண்டும்" (1872)

எனும்  மாமேதை கார்ல் மார்க்ஸின் மேற்படி கூற்று மலையக உழைப்பாளர் வர்க்கத்துக்கு மிகவும் அவசியமானதொன்று. 


அந்த வகையில் மலையகத்தில் கூலி முறைமையை ஒழித்து காணி உரிமையை வென்றெடுப்பதற்கு உழைக்கும் வர்க்கம் அரசியல்  அதிகாரத்தைக் கைப்பற்றியே  ஆக வேண்டும் எனும் திடசங்கற்பத்துடன் இயங்கியே ஆகவேண்டும்.


 கூலியா? காணியா ? எனும் எனும் கேள்வியை சமூக அரசியல் மட்டத்தில் முன்வைத்து "காணியே தீர்வு.... " , "சிறுதோட்ட உடமையே காணி உரிமையை வெல்வதற்கும் கூலி முறைமையை ஒழிப்பதற்கும் ஒரே தீர்வாகும்" எனும் தீர்மானத்தை திடசங்கற்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டி  மலையக உழைக்கும் வர்க்கம் உள்ளிட்ட அனைத்து உழைப்பாளர் மக்களோடும் உலகத் தொழிலாளர் தின உத்வேகத்தைப் பகிர்ந்து கொள்கிறேன் என  அவர் தெரிவித்துள்ளார்.


கூலியா காணியா உழைப்பாளர் தினத்தில் தீர்மானம் எடுப்போம்- திலகராஜா தெரிவிப்பு கடந்த இருநூறு ஆண்டுகளுக்கு முன்பதாக 'கூலி' எனும் நாமத்தில் இந்தியாவில் இருந்து இலங்கைக்கு  அழைத்து வரப்பட்ட தமிழ்நாட்டுத் தமிழர்கள் இன்று தம்மை  'மலையகத் தமிழர்கள்' எனும் தனித்துவமான தேசிய இனமாக இலங்கையில் நிறுவிக் கொண்டாலும், அதனை ஏற்றுக் கொள்வதில் இலங்கையின் அதிகார வர்க்கத்துக்கு இருக்கும் 'தயக்கம்' மிக நுணுக்கமாக அவதானிக்கப்பட வேண்டியது என  மலையக அரசியல் அரங்கம் செயலதிபர்   மயில்வாகனம் திலகராஜா  தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,இலங்கையில் வாழ்கின்ற மலையகத் தமிழ் மக்களின் உரிமைக் கோரிக்கைகள் பலவாயினும் அவற்றுள் மலையகத் தமிழ் தோட்டத் தொழிலார்களின் நாட்'கூலி' கோரிக்கையை மாத்திரமே பிரதானப்படுத்திக் காட்ட முற்படும் போக்கு, அதனைப் பெற்றுக் கொடுப்பதையே பெரும் சாதனையாகக் காட்டும் போக்கு, இந்த மக்களை இந்த நாட்டில் 'கூலி' களாகவே வைத்துக்கொள்வதற்கு  அதிகார வர்க்கம்  கையாளும் கைங்கரியமாகும்.அதிகார வர்க்கத்தின் இந்த இந்த நரித்தனத்தை முறியடிக்க, 'கூலியா காணியா' எனும் திடமான தீர்மானத்தை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் மலையகத் தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அத்தகைய தீர்மானத்தை நிறைவேற்றவும் அதனை வென்றெடுக்கவும் "உழைப்பைப் புதியவழிகளில் ஒழுங்கமைப்பதற்காக ஏதேனுமொரு நாள் தொழிலாளி அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றியாக வேண்டும்" (1872)எனும்  மாமேதை கார்ல் மார்க்ஸின் மேற்படி கூற்று மலையக உழைப்பாளர் வர்க்கத்துக்கு மிகவும் அவசியமானதொன்று. அந்த வகையில் மலையகத்தில் கூலி முறைமையை ஒழித்து காணி உரிமையை வென்றெடுப்பதற்கு உழைக்கும் வர்க்கம் அரசியல்  அதிகாரத்தைக் கைப்பற்றியே  ஆக வேண்டும் எனும் திடசங்கற்பத்துடன் இயங்கியே ஆகவேண்டும். கூலியா காணியா எனும் எனும் கேள்வியை சமூக அரசியல் மட்டத்தில் முன்வைத்து "காணியே தீர்வு. " , "சிறுதோட்ட உடமையே காணி உரிமையை வெல்வதற்கும் கூலி முறைமையை ஒழிப்பதற்கும் ஒரே தீர்வாகும்" எனும் தீர்மானத்தை திடசங்கற்பமாக ஏற்றுக்கொள்ள வேண்டி  மலையக உழைக்கும் வர்க்கம் உள்ளிட்ட அனைத்து உழைப்பாளர் மக்களோடும் உலகத் தொழிலாளர் தின உத்வேகத்தைப் பகிர்ந்து கொள்கிறேன் என  அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement