• May 05 2026

தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிலையில் விஜய் -பரபரப்பாகும் முடிவுகள் !

Ziya / May 4th 2026, 2:27 pm
image

தமிழக சட்டமன்றத்  தேர்தலின் தற்போதைய நிலவரப்படி காலை 10.30  மணி நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் 99 தொகுதிகளில்  முன்னிலையில்  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23 ஆம் திகதி இடம்பெற்றது.  


அதற்கமைய தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. 


முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்று சுற்றாக எண்ணப்பட்டு வருகின்றன. 


ஆரம்ப சுற்றுகளாக இருப்பதால் முன்னணிகளில் தொடர்ந்து மாற்றங்கள்  ஏற்பட்டு வருகின்றன. 

 

அதன்படி 234 தொகுதிகளில்  தற்போதைய நிலவரப்படி 99 தொகுதிகளில் தமிழக  வெற்றிக்கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் உள்ளார்.. 


ஒவ்வொரு தொகுதி முடிவுகளையும் ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமன்றி உலகேமே பரபரப்புடன் எதிர்பார்த்து வருகின்றது.

தமிழக சட்டமன்ற தேர்தல் முன்னிலையில் விஜய் -பரபரப்பாகும் முடிவுகள் தமிழக சட்டமன்றத்  தேர்தலின் தற்போதைய நிலவரப்படி காலை 10.30  மணி நிலவரப்படி தமிழக வெற்றிக்கழகத் தலைவர் 99 தொகுதிகளில்  முன்னிலையில்  உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல் கடந்த மாதம் (ஏப்ரல்) 23 ஆம் திகதி இடம்பெற்றது.  அதற்கமைய தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதன் பின்னர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் சுற்று சுற்றாக எண்ணப்பட்டு வருகின்றன. ஆரம்ப சுற்றுகளாக இருப்பதால் முன்னணிகளில் தொடர்ந்து மாற்றங்கள்  ஏற்பட்டு வருகின்றன.  அதன்படி 234 தொகுதிகளில்  தற்போதைய நிலவரப்படி 99 தொகுதிகளில் தமிழக  வெற்றிக்கழகத் தலைவர் விஜய் முன்னிலையில் உள்ளார். ஒவ்வொரு தொகுதி முடிவுகளையும் ஒட்டுமொத்த தமிழகம் மட்டுமன்றி உலகேமே பரபரப்புடன் எதிர்பார்த்து வருகின்றது.

Advertisement

Advertisement

Advertisement