நாட்டை வந்தடைந்துள்ள வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி டோ லாம் இன்று பாராளுமன்றிற்கு வருகை தந்துள்ளார்.
பாராளுமன்றத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதிக்கு செங்கம்பளத்துடன் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது.
அத்துடன் ஜனாதிபதி டோ லாம் பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
வியட்நாம் ஜனாதிபதியை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற குழுவினர் வரவேற்றனர்.
அதன்படி இன்றைய பாராளுமன்ற அமர்வில் வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாமின் உரையைத் தொடர்ந்து பி.ப. 1.30 பாராளுமன்றம் மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வியட்நாம் ஜனாதிபதி பாராளுமன்றிற்கு வருகை நாட்டை வந்தடைந்துள்ள வியட்நாம் சோசலிச குடியரசின் ஜனாதிபதி டோ லாம் இன்று பாராளுமன்றிற்கு வருகை தந்துள்ளார். பாராளுமன்றத்திற்கு வருகை தந்த வியட்நாம் ஜனாதிபதிக்கு செங்கம்பளத்துடன் பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது. அத்துடன் ஜனாதிபதி டோ லாம் பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். வியட்நாம் ஜனாதிபதியை சபாநாயகர் மற்றும் பாராளுமன்ற குழுவினர் வரவேற்றனர். அதன்படி இன்றைய பாராளுமன்ற அமர்வில் வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி டோ லாமின் உரையைத் தொடர்ந்து பி.ப. 1.30 பாராளுமன்றம் மீண்டும் கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.