கொழும்பு - நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்களை இரகசியமாக படம்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காகத் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பல பெண் மருத்துவர்கள், தங்கள் அறைகளில் குளிக்கும்போது, குறித்த வீரர்கள் தொலைப்பேசிகளை பயன்படுத்தி, படம் எடுத்ததாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் ஆண்களின் காணொளிகளையும் இவ்வாறு பதிவு செய்துள்ளனர்.
வீரர்கள் பதிவு செய்த காணொளிகளில் ஏதேனும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கைதான சந்தேக நபர்கள் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தலா 5 இலட்சம் ரூபாய் தனிநபர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
நாரஹேன்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹோட்டலில் பெண் மருத்துவர்களின் குளியலறை வீடியோ பதிவு; இலங்கை கிரிக்கெட் வீரர்கள் கைது கொழும்பு - நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் பெண்களை இரகசியமாக படம்பிடித்த குற்றச்சாட்டில் இலங்கையின் 19 வயதுக்குட்பட்ட தேசிய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொள்வதற்காகத் தனியார் ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த பல பெண் மருத்துவர்கள், தங்கள் அறைகளில் குளிக்கும்போது, குறித்த வீரர்கள் தொலைப்பேசிகளை பயன்படுத்தி, படம் எடுத்ததாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டுக்கு இணங்க இந்த கைது முன்னெடுக்கப்பட்டுள்ளது.சந்தேகநபர்கள் ஆண்களின் காணொளிகளையும் இவ்வாறு பதிவு செய்துள்ளனர். வீரர்கள் பதிவு செய்த காணொளிகளில் ஏதேனும் இணையத்தில் பகிரப்பட்டுள்ளதா என்பது குறித்து புலனாய்வாளர்கள் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கைதான சந்தேக நபர்கள் புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, தலா 5 இலட்சம் ரூபாய் தனிநபர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.நாரஹேன்பிட்டி பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.