மன்னார் மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் தொடர்பில் அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.
மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மூன்றாம் பிட்டி பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடைக்குள் வெட்டுக்கிளி ஒன்று காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த உணவகத்தில் வாங்கப்பட்ட வடையை சாப்பிட முற்பட்டபோதே, அதன் உள்ளே வெட்டுக்கிளி இருந்தமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு முன்னதாக, மன்னார் நகர் பகுதியில் வாங்கப்பட்ட முட்டை ரொட்டி ஒன்றில் இரும்புக் கம்பித் துண்டு காணப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.
ஒரு சம்பவம் தொடர்பில் மக்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், அடுத்த நாளே மற்றுமொரு உணவுப் பொருளில் வெட்டுக்கிளி காணப்பட்டுள்ளமை மன்னார் மக்களிடையே உணவுப் பாதுகாப்பு தொடர்பான கவலையை மேலும் அதிகரித்துள்ளது.
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் மாந்தை மேற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் தரம், தயாரிப்பு முறைகள் மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் உரிய முறையில் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்திற்கொண்டு, உணவகங்களில் சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதையும், உணவுப் பொருட்கள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
வெட்டுக்கிளி வடை. மன்னாரில் தொடரும் அதிர்ச்சி சம்பவங்கள் மன்னார் மாவட்டத்தில் உணவுப் பொருட்களின் தரம் மற்றும் சுகாதாரம் தொடர்பில் அடுத்தடுத்து அதிர்ச்சியளிக்கும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.மாந்தை மேற்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு உட்பட்ட மூன்றாம் பிட்டி பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் வாங்கப்பட்ட வடைக்குள் வெட்டுக்கிளி ஒன்று காணப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.குறித்த உணவகத்தில் வாங்கப்பட்ட வடையை சாப்பிட முற்பட்டபோதே, அதன் உள்ளே வெட்டுக்கிளி இருந்தமை கண்டறியப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கு முன்னதாக, மன்னார் நகர் பகுதியில் வாங்கப்பட்ட முட்டை ரொட்டி ஒன்றில் இரும்புக் கம்பித் துண்டு காணப்பட்ட சம்பவமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.ஒரு சம்பவம் தொடர்பில் மக்கள் அதிர்ச்சியில் இருந்த நிலையில், அடுத்த நாளே மற்றுமொரு உணவுப் பொருளில் வெட்டுக்கிளி காணப்பட்டுள்ளமை மன்னார் மக்களிடையே உணவுப் பாதுகாப்பு தொடர்பான கவலையை மேலும் அதிகரித்துள்ளது.இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் மாந்தை மேற்கு பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையினர் விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.மேலும், மன்னார் மாவட்டத்தில் இயங்கி வரும் உணவகங்களில் உணவுப் பொருட்களின் தரம், தயாரிப்பு முறைகள் மற்றும் சுகாதார நிலைமைகள் தொடர்பில் உரிய முறையில் கண்காணிப்பை மேற்கொள்ள வேண்டும் எனவும் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.பொதுமக்களின் சுகாதாரத்தை கருத்திற்கொண்டு, உணவகங்களில் சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படுகின்றனவா என்பதையும், உணவுப் பொருட்கள் பாதுகாப்பான முறையில் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றனவா என்பதையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.