• Mar 14 2026

வட்டவளை - நாவலப்பிட்டிக்கிடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

Chithra / Jan 5th 2026, 3:18 pm
image


வட்டவளையில் இருந்து நாவலப்பிட்டிக்கான பயணிகள் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.


நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக மலையகத்தில் தொடருந்து பாதைகளுக்கு ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக சேவை நிறுத்தப்பட்டிருந்தது.


தொடர்ந்து பாடசாலை முதலாம் தவணை இன்று ஆரம்பமானதோடு மாணவர்கள் நலன் கருதியும் அலுவலக ஊழியர்களின் நலன் கருதியும் திங்கட்கிழமை (05) ரயில் சேவைகள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, காலை 5:15 மணிக்கு வட்டவளை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பிக்கும் ரயில், காலை 6:30 மணிக்கு நாவலப்பிட்டி ரயில் நிலையத்தை வந்தடையும், மேலும் பிற்பகல் 2:15 மணிக்கு மீண்டும் நாவலப்பிட்டியிலிருந்து வட்டவளை தொடருந்து நிலையத்திற்கு சேவையை நடத்த தொடருந்து கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


எதிர்வரும் நாட்களில் இந்த ரயில் ஹட்டன் ரயில் நிலையம் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 


வட்டவளை - நாவலப்பிட்டிக்கிடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம் வட்டவளையில் இருந்து நாவலப்பிட்டிக்கான பயணிகள் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக மலையகத்தில் தொடருந்து பாதைகளுக்கு ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக சேவை நிறுத்தப்பட்டிருந்தது.தொடர்ந்து பாடசாலை முதலாம் தவணை இன்று ஆரம்பமானதோடு மாணவர்கள் நலன் கருதியும் அலுவலக ஊழியர்களின் நலன் கருதியும் திங்கட்கிழமை (05) ரயில் சேவைகள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.அதன்படி, காலை 5:15 மணிக்கு வட்டவளை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பிக்கும் ரயில், காலை 6:30 மணிக்கு நாவலப்பிட்டி ரயில் நிலையத்தை வந்தடையும், மேலும் பிற்பகல் 2:15 மணிக்கு மீண்டும் நாவலப்பிட்டியிலிருந்து வட்டவளை தொடருந்து நிலையத்திற்கு சேவையை நடத்த தொடருந்து கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் நாட்களில் இந்த ரயில் ஹட்டன் ரயில் நிலையம் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். 

Advertisement

Advertisement

Advertisement