• Sep 04 2026

கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்காவின் அதிரடி

Ziya / Sep 3rd 2026, 10:00 am
image

கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் படகுகளுக்கு எரிபொருள் வழங்கியதாகக் கூறப்படும் மிதக்கும் எரிபொருள் நிலையத்தை அமெரிக்கப் படைகள் இடைமறித்து மூழ்கடித்துள்ளன.


ஈக்வடார் அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், அமெரிக்க வீரர்கள் படகில் ஏறி சோதனை நடத்தினர். அதில் இருந்தவர்களை பாதுகாப்பாக ஈக்வடாருக்கு அழைத்துச் சென்ற பின்னர் படகு மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.


குறித்த படகு, ஈக்வடாரைச் சேர்ந்த Los Choneros குற்றக் குழுவின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாக அமெரிக்க உளவுத்தகவல்கள் தெரிவித்துள்ளன. 


கடத்தல் படகுகளுக்கு கடலில் எரிபொருள் வழங்கிய இந்த படகை அழித்ததன் மூலம், கடத்தல் வலையமைப்பின் முக்கிய தளவாட இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.


போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அமெரிக்கா–ஈக்வடார் நடவடிக்கை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த படகு மூழ்கடிப்பு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது

கிழக்கு பசிபிக் கடலில் அமெரிக்காவின் அதிரடி கிழக்கு பசிபிக் பெருங்கடலில் போதைப்பொருள் கடத்தல் படகுகளுக்கு எரிபொருள் வழங்கியதாகக் கூறப்படும் மிதக்கும் எரிபொருள் நிலையத்தை அமெரிக்கப் படைகள் இடைமறித்து மூழ்கடித்துள்ளன.ஈக்வடார் அரசுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கையில், அமெரிக்க வீரர்கள் படகில் ஏறி சோதனை நடத்தினர். அதில் இருந்தவர்களை பாதுகாப்பாக ஈக்வடாருக்கு அழைத்துச் சென்ற பின்னர் படகு மூழ்கடிக்கப்பட்டதாக அமெரிக்க தெற்கு கட்டளைப் பிரிவு தெரிவித்துள்ளது.குறித்த படகு, ஈக்வடாரைச் சேர்ந்த Los Choneros குற்றக் குழுவின் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததாக அமெரிக்க உளவுத்தகவல்கள் தெரிவித்துள்ளன. கடத்தல் படகுகளுக்கு கடலில் எரிபொருள் வழங்கிய இந்த படகை அழித்ததன் மூலம், கடத்தல் வலையமைப்பின் முக்கிய தளவாட இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறியுள்ளது.போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான அமெரிக்கா–ஈக்வடார் நடவடிக்கை மேலும் தீவிரமடைந்துள்ள நிலையில், இந்த படகு மூழ்கடிப்பு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது

Advertisement

Advertisement

Advertisement