• Sep 08 2026

இஸ்ரேல் வேலைவாய்ப்பில் சுரண்டல்; காத்திருக்கும் 1,760 பேர்! அரசை குற்றஞ்சாட்டும் சஜித்

Chithra / Sep 8th 2026, 2:28 pm
image


தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் கொள்கை பலவீனமாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.


இஸ்ரேலுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளும் செயல்திறனற்ற முறையில் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.


பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இன்று (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ‘இஸ்ரேலிய உட்கட்டமைப்புத் துறை லொட்டரி எதிர்பார்ப்பு ஐக்கிய அமைப்பினரை’ சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.


இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக 560 பேர் காத்திருப்பதாகவும், மேலும் 1,200 பேர் உட்கட்டமைப்பு லொட்டரி முறையின் கீழ் வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.


கடந்த காலத்திலும் நிர்மாணத்துறையைச் சேர்ந்த 3,500 பேருக்காக தான் குரல் கொடுத்ததாகவும், எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உட்கட்டமைப்புத் துறைக்காக எந்தவொரு வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.


வேலைவாய்ப்புக்காக செல்ல எதிர்பார்த்திருப்பவர்கள் பொலிஸ் அறிக்கைகள் உள்ளிட்ட தகுதிப் பரிசோதனைகளை நிறைவு செய்துள்ள போதிலும், அவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.


அரசாங்கத்தின் ஊடாக இவ்வாறான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டு இஸ்ரேல் செல்லும்போது சுமார் 10 இலட்சம் ரூபாய் செலவாகும் நிலையில், தனியார் வழிமுறையில் செல்வதற்கு சுமார் 35 இலட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.


இதனால், இந்த வேலைவாய்ப்பு நடவடிக்கைகளில் சுரண்டலும் முறைகேடுகளும் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டிய சஜித் பிரேமதாச, இந்த அநீதிக்கு எதிராக தான் தொடர்ந்து குரல் கொடுப்பதாகத் தெரிவித்தார்.


அத்துடன், இந்தப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்திலும் முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.


முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் காணப்படும் சுரண்டல் முறையை ஒழித்து, சுமார் 10 இலட்சம் ரூபாய் செலவில் இஸ்ரேலுக்குச் செல்லக்கூடிய வேலைவாய்ப்பு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.


இதனிடையே, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு நேரடியாகச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர், வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களை சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடி தகவல்களையும் கேட்டறிந்தார்.



இஸ்ரேல் வேலைவாய்ப்பில் சுரண்டல்; காத்திருக்கும் 1,760 பேர் அரசை குற்றஞ்சாட்டும் சஜித் தற்போதைய அரசாங்கத்தின் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் கொள்கை பலவீனமாக காணப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார்.இஸ்ரேலுக்கான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகளும் செயல்திறனற்ற முறையில் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.பத்தரமுல்லை, பொல்துவ சந்தியில் இன்று (08) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த ‘இஸ்ரேலிய உட்கட்டமைப்புத் துறை லொட்டரி எதிர்பார்ப்பு ஐக்கிய அமைப்பினரை’ சந்தித்து கலந்துரையாடியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.இஸ்ரேலில் வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொள்வதற்காக 560 பேர் காத்திருப்பதாகவும், மேலும் 1,200 பேர் உட்கட்டமைப்பு லொட்டரி முறையின் கீழ் வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்துள்ளதாகவும் சஜித் பிரேமதாச குறிப்பிட்டார்.கடந்த காலத்திலும் நிர்மாணத்துறையைச் சேர்ந்த 3,500 பேருக்காக தான் குரல் கொடுத்ததாகவும், எனினும் கடந்த இரண்டு ஆண்டுகளில் உட்கட்டமைப்புத் துறைக்காக எந்தவொரு வேலைவாய்ப்பும் பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.வேலைவாய்ப்புக்காக செல்ல எதிர்பார்த்திருப்பவர்கள் பொலிஸ் அறிக்கைகள் உள்ளிட்ட தகுதிப் பரிசோதனைகளை நிறைவு செய்துள்ள போதிலும், அவர்களுக்கு இதுவரை வேலைவாய்ப்புகள் வழங்கப்படவில்லை எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.அரசாங்கத்தின் ஊடாக இவ்வாறான வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொண்டு இஸ்ரேல் செல்லும்போது சுமார் 10 இலட்சம் ரூபாய் செலவாகும் நிலையில், தனியார் வழிமுறையில் செல்வதற்கு சுமார் 35 இலட்சம் ரூபாய் வரை செலுத்த வேண்டிய நிலை ஏற்படுவதாகவும் அவர் கூறினார்.இதனால், இந்த வேலைவாய்ப்பு நடவடிக்கைகளில் சுரண்டலும் முறைகேடுகளும் இடம்பெறுவதாகக் குற்றஞ்சாட்டிய சஜித் பிரேமதாச, இந்த அநீதிக்கு எதிராக தான் தொடர்ந்து குரல் கொடுப்பதாகத் தெரிவித்தார்.அத்துடன், இந்தப் பிரச்சினைகளை நாடாளுமன்றத்திலும் முன்வைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.முறைமையில் மாற்றத்தை ஏற்படுத்துவோம் என வாக்குறுதியளித்து ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் காணப்படும் சுரண்டல் முறையை ஒழித்து, சுமார் 10 இலட்சம் ரூபாய் செலவில் இஸ்ரேலுக்குச் செல்லக்கூடிய வேலைவாய்ப்பு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.இதனிடையே, ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற இடத்துக்கு நேரடியாகச் சென்ற எதிர்க்கட்சித் தலைவர், வேலைவாய்ப்புகளை எதிர்பார்த்து காத்திருப்பவர்களை சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடி தகவல்களையும் கேட்டறிந்தார்.

Advertisement

Advertisement

Advertisement