• Aug 16 2026

முஸ்லிம் பெண் தாதியர்களின் ஆடை விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சை – ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டு

Chithra / Aug 16th 2026, 4:09 pm
image


இலங்கையில் முஸ்லிம் பெண் தாதியர்களின் சீருடை ஆடை தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சை தேவையற்ற ஒரு விசமத்தனமான விடயம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.


சிமாரா அலி எழுதிய சிறுவர் கதைகள் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

 

முஸ்லிம் பெண்கள் மிகக் குறைந்த அளவிலேயே தாதியர் போன்ற துறைகளில் பணிக்கு வருவதாகக் குறிப்பிட்டார்.


இத்தகைய சூழலில், தாதியர் சீருடையில் காதுகளைத் திறந்து வைக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் மூலம் தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்தார்.


ஹிஜாப் அணிந்தவாறே ஸ்டெதாஸ்கோப் கருவியை  பயன்படுத்தி திறம்படச் பணியாற்றும் பல பெண் மருத்துவர்கள் இருக்கும் நிலையில், இத்தகைய ஆடைக்கட்டுப்பாட்டுச் சர்ச்சைகள் தேவையற்ற முரண்பாடுகளையே தோற்றுவிக்கும் என்றும் அவர் கூறினார்.


எனவே, இந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு தகுந்த தீர்வினை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தேவையற்ற சமூக முரண்பாடுகளைத் தவிர்த்து, இதற்கான பரிகாரத்தை அரசு விரைவில் தரும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

முஸ்லிம் பெண் தாதியர்களின் ஆடை விவகாரத்தில் தேவையற்ற சர்ச்சை – ரவூப் ஹக்கீம் சுட்டிக்காட்டு இலங்கையில் முஸ்லிம் பெண் தாதியர்களின் சீருடை ஆடை தொடர்பில் தற்போது எழுந்துள்ள சர்ச்சை தேவையற்ற ஒரு விசமத்தனமான விடயம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.சிமாரா அலி எழுதிய சிறுவர் கதைகள் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். முஸ்லிம் பெண்கள் மிகக் குறைந்த அளவிலேயே தாதியர் போன்ற துறைகளில் பணிக்கு வருவதாகக் குறிப்பிட்டார்.இத்தகைய சூழலில், தாதியர் சீருடையில் காதுகளைத் திறந்து வைக்க வேண்டும் என்பது போன்ற நிபந்தனைகள் மூலம் தேவையற்ற சர்ச்சைகள் உருவாக்கப்படுவதாக அவர் வேதனை தெரிவித்தார்.ஹிஜாப் அணிந்தவாறே ஸ்டெதாஸ்கோப் கருவியை  பயன்படுத்தி திறம்படச் பணியாற்றும் பல பெண் மருத்துவர்கள் இருக்கும் நிலையில், இத்தகைய ஆடைக்கட்டுப்பாட்டுச் சர்ச்சைகள் தேவையற்ற முரண்பாடுகளையே தோற்றுவிக்கும் என்றும் அவர் கூறினார்.எனவே, இந்த விவகாரத்தில் அரசாங்கம் உடனடியாகத் தலையிட்டு தகுந்த தீர்வினை வழங்க வேண்டும் என வலியுறுத்திய அவர், தேவையற்ற சமூக முரண்பாடுகளைத் தவிர்த்து, இதற்கான பரிகாரத்தை அரசு விரைவில் தரும் என தாம் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement