• Apr 21 2026

அனுமதி இன்றி மணல் ஏற்றிய இரண்டு டிப்பர்களும் உளவு இயந்திரமும் பறிமுதல்!

shanu / Feb 28th 2026, 5:43 pm
image

அனுமதி இன்றி மணல் ஏற்றிய  இரண்டு டிப்பர்களும் உளவு இயந்திரமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 



தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பறவைகள் சரணாலயம் பகுதிகளில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபடுகின்றனர் என்று தர்மபுர பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பறிமுதல் இடம்பெற்றுள்ளது.  


 தர்மபுர பொலிசாரால் இன்று அதிகாலை 02.30 மணியளவில்  மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதி  சோதனையின் மூலம் இரண்டு டிப்பர்கள் மற்றும் உழவியந்திரம் ஒன்றும்  பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 


குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதிகள் மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர். 


 கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தடயப் பொருட்கள் எதிர்வரும் புதன்கிழமை 03.02.2026 கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

அனுமதி இன்றி மணல் ஏற்றிய இரண்டு டிப்பர்களும் உளவு இயந்திரமும் பறிமுதல் அனுமதி இன்றி மணல் ஏற்றிய  இரண்டு டிப்பர்களும் உளவு இயந்திரமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பறவைகள் சரணாலயம் பகுதிகளில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்ட விரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபடுகின்றனர் என்று தர்மபுர பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பறிமுதல் இடம்பெற்றுள்ளது.   தர்மபுர பொலிசாரால் இன்று அதிகாலை 02.30 மணியளவில்  மேற்கொள்ளப்பட்ட திடீர் வீதி  சோதனையின் மூலம் இரண்டு டிப்பர்கள் மற்றும் உழவியந்திரம் ஒன்றும்  பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய வாகன சாரதிகள் மூவரையும் பொலிசார் கைது செய்துள்ளனர்.  கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த தடயப் பொருட்கள் எதிர்வரும் புதன்கிழமை 03.02.2026 கிளிநொச்சி நீதிமன்றம் முற்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தர்மபுர பொலிசார் தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement