• May 24 2025

கனடா தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ள இரு தமிழர்கள் அமோக வரவேற்பு

Thansita / May 24th 2025, 9:41 am
image

கனடா ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் அண்மையில் வெளியிட்டுள்ளனர்.

அதன்படி  Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர்களாக அனு ஸ்ரீஸ்கந்தராஜா, நீதன் சான் ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை வெளியிட்டுள்ளனர்.

கனடாவில் குறித்த தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் Toronto நகர சபைக்கான இடைத் தேர்தல் அறிவித்திருந்த நிலையில் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் அறிவித்துள்ளனர்.

அனு ஸ்ரீஸ்கந்தராஜா தற்போது Scarborough-Rouge Park தொகுதிக்கான Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலராக பணியாற்றுகின்ற அதே நேரேம்  நீதன் சான் தற்போது Toronto நகர பாடசாலை வாரிய தலைவராக இருக்கின்றார். 

இந்தத் தொகுதிக்கான வேட்புமனுக்கள் June 23 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரியவருகிறது.

September அல்லது October ஆரம்பத்தில் வாக்களிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. $550,000 செலவில் நடைபெறவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது                                            மேலும் தேர்தலில் போட்டியிடவிருக்கும் குறித்த இரு தமிழர்களுக்கும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கனடா தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ள இரு தமிழர்கள் அமோக வரவேற்பு கனடா ஒண்டாரியோ Scarborough-Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் அண்மையில் வெளியிட்டுள்ளனர்.அதன்படி  Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலர்களாக அனு ஸ்ரீஸ்கந்தராஜா, நீதன் சான் ஆகியோர் இந்த இடைத்தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை வெளியிட்டுள்ளனர்.கனடாவில் குறித்த தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் Toronto நகர சபைக்கான இடைத் தேர்தல் அறிவித்திருந்த நிலையில் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் அறிவித்துள்ளனர்.அனு ஸ்ரீஸ்கந்தராஜா தற்போது Scarborough-Rouge Park தொகுதிக்கான Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலராக பணியாற்றுகின்ற அதே நேரேம்  நீதன் சான் தற்போது Toronto நகர பாடசாலை வாரிய தலைவராக இருக்கின்றார். இந்தத் தொகுதிக்கான வேட்புமனுக்கள் June 23 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரியவருகிறது.September அல்லது October ஆரம்பத்தில் வாக்களிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. $550,000 செலவில் நடைபெறவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது                                            மேலும் தேர்தலில் போட்டியிடவிருக்கும் குறித்த இரு தமிழர்களுக்கும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement