சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள பார்வையற்றோருக்கான தேசிய பாடல் போட்டியான “ஸ்வர மஞ்சரி – 2026” இறுதிச் சுற்றுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் தெரிவாகியுள்ளனர்.
சமூக சேவைகள் திணைக்களத்தின் பார்வையற்றோர் மறுவாழ்வு அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச் சுற்று,
பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுஹுருபாயா கட்டடத்தில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது.
தேசிய ரீதியில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மொத்தமாக 10 போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்படி, சாவகச்சேரியைச் சேர்ந்த குலேந்திரன் ஜெகதீசன் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த றெஜிரொபின்சன் கீர்த்தனா ஆகியோரே இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளனர்.
இந்நிலையில், இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக கொழும்பு செல்லவுள்ள குறித்த இருவரும் இன்று (14) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.
இதன்போது, தேசிய மட்டத்திலான இப்போட்டியில் தங்களது இசைத் திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி வெற்றிபெறுவதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென அரச அதிபர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
மேலும், போட்டியாளர்கள் இருவருக்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.
இச்சந்திப்பில் பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தி. உமாசங்கர் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ற. தர்மினி ஆகியோரும் கலந்துகொண்டனர்.
தேசிய பாடல் போட்டியின் இறுதிச் சுற்றில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இருவர் சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடத்தப்படவுள்ள பார்வையற்றோருக்கான தேசிய பாடல் போட்டியான “ஸ்வர மஞ்சரி – 2026” இறுதிச் சுற்றுக்கு யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவர் தெரிவாகியுள்ளனர்.சமூக சேவைகள் திணைக்களத்தின் பார்வையற்றோர் மறுவாழ்வு அறக்கட்டளை நிதியத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச் சுற்று, பத்தரமுல்லையில் அமைந்துள்ள சுஹுருபாயா கட்டடத்தில் காலை 8.00 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை நடைபெறவுள்ளது.தேசிய ரீதியில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச் சுற்றுக்கு மொத்தமாக 10 போட்டியாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களில் யாழ்ப்பாண மாவட்டத்தைச் சேர்ந்த இருவரும் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதன்படி, சாவகச்சேரியைச் சேர்ந்த குலேந்திரன் ஜெகதீசன் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த றெஜிரொபின்சன் கீர்த்தனா ஆகியோரே இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ளனர்.இந்நிலையில், இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக கொழும்பு செல்லவுள்ள குறித்த இருவரும் இன்று (14) யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபனை நேரில் சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.இதன்போது, தேசிய மட்டத்திலான இப்போட்டியில் தங்களது இசைத் திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்தி வெற்றிபெறுவதுடன், யாழ்ப்பாண மாவட்டத்திற்கும் பெருமை சேர்க்க வேண்டுமென அரச அதிபர் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.மேலும், போட்டியாளர்கள் இருவருக்கும் தனது பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் அவர் தெரிவித்தார்.இச்சந்திப்பில் பிரதம கணக்காளர் எஸ். கிருபாகரன், உதவி மாவட்டச் செயலாளர் உ. தர்சினி, மாவட்ட சமூக சேவைகள் அபிவிருத்தி உத்தியோகத்தர் தி. உமாசங்கர் மற்றும் யாழ்ப்பாண பிரதேச செயலக சமூக சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர் ற. தர்மினி ஆகியோரும் கலந்துகொண்டனர்.