• May 22 2026

பெக்கோ சமனுக்கு சொந்தமான இரு சொகுசு பேருந்துகள் பறிமுதல்

Chithra / Oct 23rd 2025, 6:42 pm
image

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

இந்த இரு பேருந்துகளினதும் பெறுமதி 80 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.

மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினால் இந்த இரு பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சந்தேக நபரின் பிணை மனு தொடர்பான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம அறிவித்தார். 

குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

பெக்கோ சமனுக்கு சொந்தமான இரு சொகுசு பேருந்துகள் பறிமுதல் பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த பெக்கோ சமனுக்கு சொந்தமான சொகுசு பேருந்துகள் இரண்டு பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த இரு பேருந்துகளினதும் பெறுமதி 80 மில்லியன் ரூபாய் என தெரிவிக்கப்படுகிறது.மேல் மாகாண வடக்கு குற்றத் தடுப்பு பிரிவினால் இந்த இரு பேருந்துகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெக்கோ சமனின் மனைவி ஷாதிகா லக்ஷனியை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை மீளவும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சந்தேக நபரின் பிணை மனு தொடர்பான உத்தரவு அன்றைய தினம் அறிவிக்கப்படும் என கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம அறிவித்தார். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பிரதிவாதிகள் தரப்பு சட்டத்தரணிகள் முன்வைத்த வாதங்களை பரிசீலித்த பின்னர் நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்தார்.

Advertisement

Advertisement

Advertisement