ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை தடுக்க ஈரான் ஏதேனும் செய்தால் அவர்கள் இதுவரை தாக்கப்பட்டதை விட 20 மடங்கு கடுமையாக அமெரிக்காவால் தாக்கப்படுவர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி இதனை தனது உத்தியோக பூர்வ எக்ஸ் தளமான டிரூத் சோஷியல் தளத்திலேயே பதிவு செய்துள்ளார்.
அந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
அதேவேளை ஈரான் ஒருபோதும் ஒரு நாடாக மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலையை உருவாக்கும் வகையில் எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை தகர்ப்போம்.
மரணமும், நெருப்பும், ஆக்ரோஷமும் ஈரான் மீது பொழியும், ஆனால் இது நடக்கக் கூடாது என்று நம்புகின்றேன். அதேபோல் பிராத்தினை செய்கின்றேன் என அவர் பதிவிட்டுள்ளதாக அல் ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் "ஈரானின் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடருமானால், இந்தப் பிராந்தியத்திலிருந்து "ஒரு லீற்றர் எண்ணெய்" கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படமாட்டாது என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹோர்முஸ் நீரிணை குறித்து ட்ரம்ப்பின் எச்சரிக்கை. ஒரு லீற்றர் எண்ணெய் கூட வெளியேற விடமாட்டோம் - ஈரான் பதிலடி ஹோர்முஸ் நீரிணை பகுதியில் எண்ணெய் போக்குவரத்தை தடுக்க ஈரான் ஏதேனும் செய்தால் அவர்கள் இதுவரை தாக்கப்பட்டதை விட 20 மடங்கு கடுமையாக அமெரிக்காவால் தாக்கப்படுவர் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்க ஜனாதிபதி இதனை தனது உத்தியோக பூர்வ எக்ஸ் தளமான டிரூத் சோஷியல் தளத்திலேயே பதிவு செய்துள்ளார்.அந்த பதிவில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,அதேவேளை ஈரான் ஒருபோதும் ஒரு நாடாக மீண்டும் கட்டியெழுப்ப முடியாத நிலையை உருவாக்கும் வகையில் எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை தகர்ப்போம்.மரணமும், நெருப்பும், ஆக்ரோஷமும் ஈரான் மீது பொழியும், ஆனால் இது நடக்கக் கூடாது என்று நம்புகின்றேன். அதேபோல் பிராத்தினை செய்கின்றேன் என அவர் பதிவிட்டுள்ளதாக அல் ஜெசீரா செய்தி வெளியிட்டுள்ளது.இந்நிலையில் "ஈரானின் மீதான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடருமானால், இந்தப் பிராந்தியத்திலிருந்து "ஒரு லீற்றர் எண்ணெய்" கூட ஏற்றுமதி செய்ய அனுமதிக்கப்படமாட்டாது என ஈரான் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.