• Aug 25 2026

மலையக ரயில் பாதைக்கு மீண்டும் சிக்கல்! சீரமைப்பு பணிகளில் தாமதம்

Aathira / Aug 25th 2026, 12:09 pm
image

டித்வா புயலின்போது ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த மலையக ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள், தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தாமதமடைந்துள்ளன.

ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டன் மற்றும் நானுஓயா வரையிலான பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் தற்போது சுமார் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக திட்டப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட தித்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மலையக ரயில் பாதையின் பல பகுதிகள் சேதமடைந்தன.

இதனைத் தொடர்ந்து ஹட்டன் முதல் நானுஓயா வரையிலான பகுதிகளில் பல்வேறு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.

கொட்டகலை மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள கிரேக்லி தோட்டப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜைக்கா நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும், நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கற்கள் உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக பணிகளின் வேகம் குறைந்துள்ளதாகவும், இதுவரை திட்டத்தின் சுமார் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை சீரடைந்தால், கிரேக்லி தோட்டப் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பகுதியின் புனரமைப்பு பணிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக திட்டத்தின் தொழில்நுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள ஏனைய சேதங்களையும் சீரமைக்கும் பணிகள் சற்று மந்தமாக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், காலநிலை சீரடைந்தவுடன் புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி, பதுளை முதல் நாவலப்பிட்டி வரையிலான ரயில் சேவைகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப அதிகாரி தெரிவித்துள்ளார்.

மலையக ரயில் பாதைக்கு மீண்டும் சிக்கல் சீரமைப்பு பணிகளில் தாமதம் டித்வா புயலின்போது ஏற்பட்ட மண் சரிவு மற்றும் வெள்ளத்தால் சேதமடைந்த மலையக ரயில் பாதையின் புனரமைப்பு பணிகள், தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக தாமதமடைந்துள்ளன.ஹட்டன், கொட்டகலை, தலவாக்கலை, வட்டகொட, கிரேட் வெஸ்டன் மற்றும் நானுஓயா வரையிலான பகுதிகளில் முன்னெடுக்கப்பட்டு வரும் புனரமைப்பு பணிகள் தற்போது சுமார் 60 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக திட்டப் பொறுப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.கடந்த ஆண்டு டிசம்பர் 27ஆம் திகதி மத்திய மலைநாட்டில் ஏற்பட்ட தித்வா புயல் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கு காரணமாக மலையக ரயில் பாதையின் பல பகுதிகள் சேதமடைந்தன.இதனைத் தொடர்ந்து ஹட்டன் முதல் நானுஓயா வரையிலான பகுதிகளில் பல்வேறு புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.கொட்டகலை மற்றும் தலவாக்கலை ரயில் நிலையங்களுக்கு இடையிலுள்ள கிரேக்லி தோட்டப் பகுதியில் ஏற்பட்ட பாரிய நிலச்சரிவு ஏற்பட்ட இடத்திலும், தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஜைக்கா நிறுவனத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.எனினும், நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து நிலவும் மழையுடனான சீரற்ற வானிலை காரணமாக, கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான கற்கள் உள்ளிட்ட பொருட்களைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இதன் காரணமாக பணிகளின் வேகம் குறைந்துள்ளதாகவும், இதுவரை திட்டத்தின் சுமார் 60 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வானிலை சீரடைந்தால், கிரேக்லி தோட்டப் பகுதியில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவு பகுதியின் புனரமைப்பு பணிகளை எதிர்வரும் செப்டெம்பர் மாத இறுதிக்குள் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக திட்டத்தின் தொழில்நுட்ப அதிகாரி அதுல விஜேசிங்க தெரிவித்துள்ளார்.மத்திய மலைநாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ரயில் பாதையில் ஏற்பட்டுள்ள ஏனைய சேதங்களையும் சீரமைக்கும் பணிகள் சற்று மந்தமாக நடைபெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.எவ்வாறாயினும், காலநிலை சீரடைந்தவுடன் புனரமைப்பு பணிகளை விரைவுபடுத்தி, பதுளை முதல் நாவலப்பிட்டி வரையிலான ரயில் சேவைகளை மீண்டும் வழமைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என தொழில்நுட்ப அதிகாரி தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement