முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இனப்படுகொலை நிகழ்ந்த இடங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அஞ்சலி நிகழ்வுகளை நடத்தி வருகின்றது.
அந்தவகையில் இன்றையதினம் நவாலியில் அமைந்துள்ள சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
கொட்டும் மழைக்கும் மத்தியிலும் ஈகைச் சுடர் ஏற்றி, மலர்தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.
இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடன் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் இணைத்து கொண்டனர்.
முள்ளிவாய்க்கால் நினைவு வாரத்தை முன்னிட்டு நவாலி சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் அஞ்சலி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தை முன்னிட்டு இனப்படுகொலை நிகழ்ந்த இடங்களில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியானது அஞ்சலி நிகழ்வுகளை நடத்தி வருகின்றது.அந்தவகையில் இன்றையதினம் நவாலியில் அமைந்துள்ள சென் பீற்றர்ஸ் தேவாலயத்தில் நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.கொட்டும் மழைக்கும் மத்தியிலும் ஈகைச் சுடர் ஏற்றி, மலர்தூவி உணர்வு ரீதியாக அஞ்சலி நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.இந்த அஞ்சலி நிகழ்வில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினருடன் உயிரிழந்தவர்களின் உறவினர்களும் இணைத்து கொண்டனர்.