• May 09 2026

யாழ் கல்வியங்காடு பகுதியில் விஜயகாந்திற்கு அஞ்சலி...!samugammedia

Ziya / Dec 29th 2023, 12:53 pm
image

தே.மு.தி.க தலைவரும் தென்னிந்திய திரையுலக  பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம்(28) அதிகாலை  காலமானார்.

இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

அவரது இறுதி நிகழ்வுகள் இன்று மாலை இடம்பெறவுள்ளது.

அதேவேளை மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு  இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தமது இரங்கலை தெரிவித்தும்   வருகின்றனர்.

அந்தவகையில், யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு  அருகில் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதேவேளை யாழ் பொன்னாலை, மூளாய் பகுதிகளில் விஜய்காந்த் ரசிகர்களால் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





யாழ் கல்வியங்காடு பகுதியில் விஜயகாந்திற்கு அஞ்சலி.samugammedia தே.மு.தி.க தலைவரும் தென்னிந்திய திரையுலக  பிரபல நடிகருமான விஜயகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக  தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்றையதினம்(28) அதிகாலை  காலமானார்.இந்நிலையில் அவரது மறைவுக்கு பல்வேறு தரப்பினரும் தமது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.அவரது இறுதி நிகழ்வுகள் இன்று மாலை இடம்பெறவுள்ளது.அதேவேளை மறைந்த கேப்டன் விஜயகாந்திற்கு  இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் தமது இரங்கலை தெரிவித்தும்   வருகின்றனர்.அந்தவகையில், யாழ். கல்வியங்காடு பகுதியில் அமைந்துள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு  அருகில் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டு விஜயகாந்திற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.அதேவேளை யாழ் பொன்னாலை, மூளாய் பகுதிகளில் விஜய்காந்த் ரசிகர்களால் கண்ணீர் அஞ்சலி பதாகைகள் கட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement