• Jul 12 2025

புதுக்குடியிருப்பில் உயிரிழந்த வர்த்தகர்களுக்கு நினைவேந்தல்

Chithra / Jul 11th 2025, 7:20 pm
image


கடந்த காலங்களில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்துக்குட்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிரிழந்த வர்த்தகர்களை நினைவு கூர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் உயிரிழந்த வர்த்தகர்களுக்காக இன்று காலை அஞ்சலி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.

புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வர்த்தகர்களின் குடும்பத்தினர்கள், வர்த்தகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

இதேவேளை குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது..


புதுக்குடியிருப்பில் உயிரிழந்த வர்த்தகர்களுக்கு நினைவேந்தல் கடந்த காலங்களில் புதுக்குடியிருப்பு வர்த்தக சங்கத்துக்குட்பட்ட பகுதியில் வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டு உயிரிழந்த வர்த்தகர்களை நினைவு கூர்ந்து புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் உயிரிழந்த வர்த்தகர்களுக்காக இன்று காலை அஞ்சலி நிகழ்வு ஒன்று இடம்பெற்றது.புதுக்குடியிருப்பு வர்த்தக சங்க தலைவர் த.நவநீதன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வர்த்தகர்களின் குடும்பத்தினர்கள், வர்த்தகர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள், முச்சக்கர வண்டி உரிமையாளர்கள் என பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தனர்.இதேவேளை குறித்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக புதுக்குடியிருப்பு வர்த்தகர்கள் அனைவரும் தமது வர்த்தக நிலையங்களை மூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement