• Mar 14 2026

திருகோணமலை, கொழும்பு வரையான ரயில் சேவை மீள ஆரம்பம்!

shanu / Dec 20th 2025, 8:56 pm
image

திருகோணமலை, கொழும்பு வரையான புகையிரத சேவை மிக நீண்ட நாட்களின் பின் இன்று (20) காலை 07 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டது.


நாட்டில் ஏற்பட்ட சீரற்ற நிலையில் பின் குறித்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது.

குறித்த புகையிரத வண்டியானது கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி காலை 06.00 மணிக்கு புறப்படும்.


குறித்த திருகோணமலை கொழும்பு வரையான சேவை கடந்த மாதம் (27ம் திகதி வரை சேவை சீரற்ற கால நிலையின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புகையிரத வண்டி ஆரம்பிக்கப்பட்டன.


இருந்த போதிலும் திருகோணமலை கொழும்புக்கான இரவு நேர சேவை இன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையும் காணப்படுகிறது. 


திருகோணமலை கொழும்பு வரையான சேவையில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு முதலாம் தர குளிரூட்டப்பட்ட சேவையையின் ஊடாக வெளிநாட்னவர்களின் பயணங்கள் அதிகமாக இருந்தது. 


ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் மிக விரைவில் இரவு நேர சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

திருகோணமலை, கொழும்பு வரையான ரயில் சேவை மீள ஆரம்பம் திருகோணமலை, கொழும்பு வரையான புகையிரத சேவை மிக நீண்ட நாட்களின் பின் இன்று (20) காலை 07 மணிக்கு கொழும்பு நோக்கி புறப்பட்டது.நாட்டில் ஏற்பட்ட சீரற்ற நிலையில் பின் குறித்த புகையிரத சேவை ஆரம்பிக்கப்பட்டது.குறித்த புகையிரத வண்டியானது கொழும்பில் இருந்து திருகோணமலை நோக்கி காலை 06.00 மணிக்கு புறப்படும்.குறித்த திருகோணமலை கொழும்பு வரையான சேவை கடந்த மாதம் (27ம் திகதி வரை சேவை சீரற்ற கால நிலையின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் புகையிரத வண்டி ஆரம்பிக்கப்பட்டன.இருந்த போதிலும் திருகோணமலை கொழும்புக்கான இரவு நேர சேவை இன்மையால் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையும் காணப்படுகிறது. திருகோணமலை கொழும்பு வரையான சேவையில் அதிகளவான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தருவதுண்டு முதலாம் தர குளிரூட்டப்பட்ட சேவையையின் ஊடாக வெளிநாட்னவர்களின் பயணங்கள் அதிகமாக இருந்தது. ஆனாலும் துரதிர்ஷ்டவசமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. எனினும் மிக விரைவில் இரவு நேர சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement