• Oct 14 2026

பால் சேகரிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம் – 24 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி!

Chithra / Oct 14th 2026, 2:36 pm
image


நுவரெலியா - பொகவந்தலாவையில் பால் சேகரிப்பதற்காகச் சென்ற டிப்பர் லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தேயிலைத் தோட்டப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.


இந்த விபத்து இன்று (14) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


பால் சேகரிப்பதற்காகப் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் லொறி, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, தேயிலைத் தோட்டத்திலுள்ள சுமார் 24 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.


இந்த விபத்தில் லொறியின் சாரதியும் அவரது உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர்.


காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


விபத்துக்கான காரணம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பால் சேகரிக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம் – 24 அடி பள்ளத்தில் கவிழ்ந்த லொறி நுவரெலியா - பொகவந்தலாவையில் பால் சேகரிப்பதற்காகச் சென்ற டிப்பர் லொறியொன்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தேயிலைத் தோட்டப் பகுதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.இந்த விபத்து இன்று (14) புதன்கிழமை காலை இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.பால் சேகரிப்பதற்காகப் பயணித்துக்கொண்டிருந்த டிப்பர் லொறி, திடீரென சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, தேயிலைத் தோட்டத்திலுள்ள சுமார் 24 அடி பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது.இந்த விபத்தில் லொறியின் சாரதியும் அவரது உதவியாளரும் படுகாயமடைந்துள்ளனர்.காயமடைந்த இருவரும் மீட்கப்பட்டு பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு சிகிச்சை பெற்று வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.விபத்துக்கான காரணம் தொடர்பில் பொகவந்தலாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement