• May 03 2026

சுதந்திர தினத்தில் கொழும்பில் நடந்த பயங்கரம்! கொலையில் முடிந்த தகராறு

Chithra / Feb 5th 2026, 11:37 am
image

  

கொழும்பு - கதிரேசன் வீதி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் நேற்று (04) பிற்பகல் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.


கொலை செய்யப்பட்டவர் கொழும்பு ஆட்டுப்பட்டி தெரு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். 


கொலைசெய்யப்பட்ட நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையிலான தகராறின் விளைவாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


தாக்குதலின்போது காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கொலைசெய்யப்பட்டவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. 


சந்தேகநபரைக் கைது செய்வதற்கு ஆட்டுப்பட்டி தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

சுதந்திர தினத்தில் கொழும்பில் நடந்த பயங்கரம் கொலையில் முடிந்த தகராறு   கொழும்பு - கதிரேசன் வீதி பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் நேற்று (04) பிற்பகல் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.கொலை செய்யப்பட்டவர் கொழும்பு ஆட்டுப்பட்டி தெரு பகுதியைச் சேர்ந்த 48 வயதுடையவர் ஆவார். கொலைசெய்யப்பட்ட நபருக்கும் மற்றொரு நபருக்கும் இடையிலான தகராறின் விளைவாக இந்த தாக்குதல் நடந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.தாக்குதலின்போது காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கொலைசெய்யப்பட்டவரின் சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரைக் கைது செய்வதற்கு ஆட்டுப்பட்டி தெரு பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement