யாழில் பேருந்தின் மிதிபலகையில் நின்று முகம் கழுவிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அநுராதபுரத்தை சேர்ந்த 35 வயதுடைய கருப்பையா சிவகுமார் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருந்திருந்துள்ளார்.
இதன்போது செம்மணிப் பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சித்துள்ளார். இதன்போது பேருந்து செம்மணி வளைவில் திரும்பும்போது கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார்.
அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
பேருந்தின் மிதிபலகையில் நின்று முகம் கழுவிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த சோகம் யாழில் பேருந்தின் மிதிபலகையில் நின்று முகம் கழுவிய இளம் குடும்பஸ்தர் ஒருவர் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அநுராதபுரத்தை சேர்ந்த 35 வயதுடைய கருப்பையா சிவகுமார் என்ற ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இது குறித்து மேலும் தெரியவருகையில்,இவர் யாழ்ப்பாணத்தில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்றுமுன்தினம் காலை அநுராதபுரத்தில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பேருந்தில் வந்து கொண்டிருந்திருந்துள்ளார்.இதன்போது செம்மணிப் பகுதியில் வந்துகொண்டிருக்கும்போது பேருந்தின் மிதிபலகையில் நின்றவாறு முகம் கழுவ முயற்சித்துள்ளார். இதன்போது பேருந்து செம்மணி வளைவில் திரும்பும்போது கீழே விழுந்து மயக்கமுற்றுள்ளார்.அதன்பின்னர் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இரவு உயிரிழந்துள்ளார்.அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.