• Mar 05 2026

LGBTIQ சமூகத்தை இலக்கு வைத்த சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் ரத்து!

Ziya / Mar 4th 2026, 4:36 pm
image

இலங்கையில் LGBTIQ சமூகத்தினரை விசேடமாக இலக்கு வைத்து எவ்வித சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதில்லை என இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகாரசபை கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று புதன்கிழமை (04) மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார்.


இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டமொன்றுக்கு அனுமதி வழங்கி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரால் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது. 


தேச ஹிதைஷி தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 


இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதன் மனுதாரர்களில் ஒருவரான வைத்தியர் வசந்த பண்டாரவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

LGBTIQ சமூகத்தை இலக்கு வைத்த சுற்றுலா ஊக்குவிப்புத் திட்டம் ரத்து இலங்கையில் LGBTIQ சமூகத்தினரை விசேடமாக இலக்கு வைத்து எவ்வித சுற்றுலா ஊக்குவிப்பு வேலைத்திட்டங்களையும் முன்னெடுப்பதில்லை என இலங்கை சுற்றுலா வளர்ச்சி அதிகாரசபை கொள்கை ரீதியான தீர்மானமொன்றை எடுத்துள்ளதாக சட்டமா அதிபர் இன்று புதன்கிழமை (04) மேன்முறையீட்டு நீதிமன்றுக்கு அறிவித்தார்.இலங்கையில் ஒரே பாலினத்தவர் சமூகத்தை மையமாகக் கொண்ட சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் திட்டமொன்றுக்கு அனுமதி வழங்கி, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவரால் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றிற்கு வழங்கப்பட்ட கடிதத்தை செல்லுபடியற்றதாக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டது. தேச ஹிதைஷி தேசிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் குணதாச அமரசேகர உள்ளிட்ட குழுவினரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதன் மனுதாரர்களில் ஒருவரான வைத்தியர் வசந்த பண்டாரவும் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement