• Nov 15 2026

புயலாக வலுப்பெறும் தாழமுக்கம்! உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்!

Chithra / Nov 15th 2026, 1:20 pm
image


இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் உருவாகியுள்ள தாழமுக்கம் புயலாக வலுப்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதையடுத்து, நாட்டின் பல கடற்பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.


தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் பல நாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இன்று (15) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (16) காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு அருகில் காணப்பட்ட குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் தற்போது தாழமுக்கமாக வலுப்பெற்றுள்ளது.


குறித்த தாழமுக்கம் திருகோணமலையிலிருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்குத் திசையில் நிலைபெற்றிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.


இந்தத் தொகுதியானது இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பால் வடக்கே சாய்வாக வடமேற்குத் திசையில் நகர்ந்து, நாளை (16) காலை தீவிர தாழமுக்கமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அத்துடன், நாளை இரவு தெற்கு மற்றும் அதனை அண்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் புயலாகவும், நாளை மறுநாள் (17) மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் தீவிர புயலாகவும் வலுப்பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனையடுத்து, வட அகலாங்கு 05 முதல் 15 வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 90 வரையிலும் அமைந்துள்ள கடற்பிராந்தியங்கள் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியங்களில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


குறித்த கடற்பிராந்தியங்களில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.


மேலும், கடல்சார் சமூகத்தினர் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிவித்தல்களைத் தொடர்ந்து அவதானித்து, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.


புயலாக வலுப்பெறும் தாழமுக்கம் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல் இலங்கையின் கிழக்குக் கடற்பரப்பில் உருவாகியுள்ள தாழமுக்கம் புயலாக வலுப்பெறக்கூடிய சாத்தியம் காணப்படுவதையடுத்து, நாட்டின் பல கடற்பிராந்தியங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபடும் பல நாள் மீன்பிடிப் படகுகள் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பிராந்தியங்களுக்கே இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இன்று (15) காலை 11.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவித்தல், நாளை (16) காலை 11.30 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இலங்கைக்கு கிழக்கே வங்காள விரிகுடா கடற்பரப்பிற்கு அருகில் காணப்பட்ட குறைந்த காற்றழுத்தப் பிரதேசம் தற்போது தாழமுக்கமாக வலுப்பெற்றுள்ளது.குறித்த தாழமுக்கம் திருகோணமலையிலிருந்து சுமார் 600 கிலோமீற்றர் தொலைவில் வடகிழக்குத் திசையில் நிலைபெற்றிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.இந்தத் தொகுதியானது இலங்கையின் கிழக்குக் கரைக்கு அப்பால் வடக்கே சாய்வாக வடமேற்குத் திசையில் நகர்ந்து, நாளை (16) காலை தீவிர தாழமுக்கமாக வலுப்பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.அத்துடன், நாளை இரவு தெற்கு மற்றும் அதனை அண்டிய மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் புயலாகவும், நாளை மறுநாள் (17) மேற்கு மத்திய வங்காள விரிகுடா கடற்பரப்பில் தீவிர புயலாகவும் வலுப்பெறுவதற்கான அதிக வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, வட அகலாங்கு 05 முதல் 15 வரையிலும், கிழக்கு நெட்டாங்கு 80 முதல் 90 வரையிலும் அமைந்துள்ள கடற்பிராந்தியங்கள் மற்றும் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை, பொத்துவில் ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்கரைக்கு அப்பாலுள்ள கடற்பிராந்தியங்களில் மறு அறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.குறித்த கடற்பிராந்தியங்களில் ஏற்கனவே மீன்பிடி மற்றும் கடல்சார் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாகப் பாதுகாப்பான இடங்களை நோக்கிச் செல்லுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.மேலும், கடல்சார் சமூகத்தினர் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்கால வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கை அறிவித்தல்களைத் தொடர்ந்து அவதானித்து, பாதுகாப்பு அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement