• Jul 24 2025

கறுப்பு ஜூலையின் 42 ஆவது நினைவு தினம் இன்று!

shanuja / Jul 23rd 2025, 9:04 am
image

இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமான தினமாக இன்று ஜூலை 23 அமைகிறது. 

 

யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கண்ணி வெடித்தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்த வன்முறைக்கான காரணம் உருவாக்கப்பட்டது. 


இதன்படி, 1983 ஜூலை 24 ஆம் திகதியன்று இரவு, குறித்த படையினரின் உடலங்கள் கொழும்புக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் பொரளை பகுதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டன. 

 

இந்த இன வன்முறையின் ஆரம்பம் பொதுவாகக் கறுப்பு ஜூலை என்று பதிவாகியுள்ளது. இந்த வன்முறை 1983 ஜூலை 30 ஆம் திகதி வரை நீடித்தது. 

 

இந்த நாட்களில் சுமார் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 18,000 வீடுகள் அழிக்கப்பட்டன. 5,000 வணிக நிலையங்கள் அழிக்கப்பட்டன. அத்துடன், 90,000 முதல் 150,000 தமிழர்கள் இடம்பெயர்ந்தனர். 

 

கறுப்பு ஜூலை வன்முறையின்போது சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டன. 


இலட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கைத்தீவை விட்டுப் புலம்பெயர்ந்து ஏனைய நாடுகளுக்குச் செல்வதற்கு இந்த வன்முறையே வித்திட்டது. 

 

அத்துடன், இந்த வன்முறையே தமிழர் போராட்டம் தீவிரமாவதற்கும் காரணமாக அமைந்தது. அதேநேரம், இலங்கையின் இனப்பிரச்சினையையும் சர்வதேச பிரச்சினையாக மாற்றியது.

கறுப்பு ஜூலையின் 42 ஆவது நினைவு தினம் இன்று இலங்கையில் 1983 ஆம் ஆண்டு தமிழர்களுக்கு எதிரான வன்முறைகளுக்குக் காரணமான தினமாக இன்று ஜூலை 23 அமைகிறது.  யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கண்ணி வெடித்தாக்குதலில் 13 படையினர் கொல்லப்பட்டதை அடுத்து, இந்த வன்முறைக்கான காரணம் உருவாக்கப்பட்டது. இதன்படி, 1983 ஜூலை 24 ஆம் திகதியன்று இரவு, குறித்த படையினரின் உடலங்கள் கொழும்புக்கு எடுத்து வரப்பட்ட நிலையில் பொரளை பகுதியில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டன.  இந்த இன வன்முறையின் ஆரம்பம் பொதுவாகக் கறுப்பு ஜூலை என்று பதிவாகியுள்ளது. இந்த வன்முறை 1983 ஜூலை 30 ஆம் திகதி வரை நீடித்தது.  இந்த நாட்களில் சுமார் 3,000 தமிழர்கள் கொல்லப்பட்டனர். 18,000 வீடுகள் அழிக்கப்பட்டன. 5,000 வணிக நிலையங்கள் அழிக்கப்பட்டன. அத்துடன், 90,000 முதல் 150,000 தமிழர்கள் இடம்பெயர்ந்தனர்.  கறுப்பு ஜூலை வன்முறையின்போது சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் சொத்துக்களுக்குச் சேதம் விளைவிக்கப்பட்டன. இலட்சக்கணக்கான தமிழர்கள் இலங்கைத்தீவை விட்டுப் புலம்பெயர்ந்து ஏனைய நாடுகளுக்குச் செல்வதற்கு இந்த வன்முறையே வித்திட்டது.  அத்துடன், இந்த வன்முறையே தமிழர் போராட்டம் தீவிரமாவதற்கும் காரணமாக அமைந்தது. அதேநேரம், இலங்கையின் இனப்பிரச்சினையையும் சர்வதேச பிரச்சினையாக மாற்றியது.

Advertisement

Advertisement

Advertisement