நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் கூட இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட நிவாரணங்களையாவது தயவு செய்து வழங்குங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயல் நாட்டையே புரட்டிப்போட்டது. இதில் வீடுகளை முழுவதுமாக இழந்தும் வீடுகள் அரைவாசி பாதிக்கப்பட்டும் மீனவர்கள் தமது வாழ்வாதார பொருள்களை இழந்தும் பெரும் சிரமப்பட்டனர்.
இந்த நிலையில் டித்வாவால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நிவாரணங்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்பு பாராளுமன்றில் உறுதியளித்தார்.
எனினும் இதுவரையில் டித்வா நிவாரணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. தற்போது மத்திய கிழக்குப் போர் நாட்டையும் பாதித்துள்ள நிலையில் எரிபொருள், எரிவாயு, உணவுப்பொருள்கள் என அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு எரிபொருள், எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு மானியங்களும் மீனவர்கள், அஸ்வெசும பயனாளர்கள் உள்ளிட்டோரது நிவாரணக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டித்வா நிவாரணங்களே இதுவரையில் வழங்கப்படவில்லை. எனவே தயவு செய்து இன்று அறிவித்த நிவாரணங்களையாவது மக்களுக்கு வழங்குங்கள் என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
டித்வா நிவாரணங்களும் இதுவரை வழங்கவில்லை;இன்று அறிவித்த நிவாரணங்களையாவது தயவுசெய்து வழங்குங்கள் - சஜித் நாட்டில் ஏற்பட்ட டித்வா புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரணங்கள் கூட இதுவரை வழங்கப்படவில்லை. இந்த நிலையில் இன்று அறிவிக்கப்பட்ட நிவாரணங்களையாவது தயவு செய்து வழங்குங்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற விவாதத்தில் உரையாற்றுகையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட டித்வா புயல் நாட்டையே புரட்டிப்போட்டது. இதில் வீடுகளை முழுவதுமாக இழந்தும் வீடுகள் அரைவாசி பாதிக்கப்பட்டும் மீனவர்கள் தமது வாழ்வாதார பொருள்களை இழந்தும் பெரும் சிரமப்பட்டனர். இந்த நிலையில் டித்வாவால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் நிவாரணங்கள் வழங்கப்படும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்பு பாராளுமன்றில் உறுதியளித்தார். எனினும் இதுவரையில் டித்வா நிவாரணங்கள் முழுமையாக வழங்கப்படவில்லை. தற்போது மத்திய கிழக்குப் போர் நாட்டையும் பாதித்துள்ள நிலையில் எரிபொருள், எரிவாயு, உணவுப்பொருள்கள் என அத்தியாவசிய பொருள்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனைக் கருத்திற்கொண்டு எரிபொருள், எரிவாயு உள்ளிட்டவற்றுக்கு மானியங்களும் மீனவர்கள், அஸ்வெசும பயனாளர்கள் உள்ளிட்டோரது நிவாரணக் கொடுப்பனவுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டித்வா நிவாரணங்களே இதுவரையில் வழங்கப்படவில்லை. எனவே தயவு செய்து இன்று அறிவித்த நிவாரணங்களையாவது மக்களுக்கு வழங்குங்கள் என்று சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.