• Mar 11 2026

அக்காவின் திருமணத்தை முடித்து விட்டு வீடு திரும்பிய மூன்று சகோதரிகள் பலி

Chithra / Nov 4th 2025, 6:47 pm
image

இந்தியாவின் - தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கற்கள் ஏற்றிவந்த டிப்பர், பேருந்து  மீது மோதி விபத்து ஏற்பட்டது. 

இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்தனர். 

இந்நிலையில் குறித்த விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பி கொண்டு இருந்த மூன்று இளைய சகோதரிகளும் உயிரிழந்துள்ளனர். 


இதனால் நான்கு மகள்களில் மூத்த மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய குடும்பம் தற்போது கடும் சோகத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

விபத்தில் சிக்கி பலியான மூன்று சகோதரிகளின் உடலங்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

அக்காவின் திருமணத்தை முடித்து விட்டு வீடு திரும்பிய மூன்று சகோதரிகள் பலி இந்தியாவின் - தெலுங்கானாவில் பேருந்து மீது டிப்பர் வாகனம் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் மூன்று சகோதரிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் கற்கள் ஏற்றிவந்த டிப்பர், பேருந்து  மீது மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் உயிரிழந்த நிலையில் பலரும் காயமடைந்தனர். இந்நிலையில் குறித்த விபத்தில் மூத்த சகோதரியின் திருமணத்திற்கு சென்று ஊர் திரும்பி கொண்டு இருந்த மூன்று இளைய சகோதரிகளும் உயிரிழந்துள்ளனர். இதனால் நான்கு மகள்களில் மூத்த மகளுக்கு நடைபெற்ற திருமணத்தை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டிய குடும்பம் தற்போது கடும் சோகத்தில் மூழ்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்தில் சிக்கி பலியான மூன்று சகோதரிகளின் உடலங்களும் நேற்று மாலை சொந்த ஊருக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

Advertisement