'வளமான நாடு - பாதுகாப்பான வாழ்வு' என்ற நோக்கத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தேசிய இயக்கமான 'பிரஜா சக்தி' திட்டத்தின் கீழ், "ஆயிரம் கிராமங்கள் - ஆயிரம் வேலைகள்" என்ற தேசிய வேலைத் திட்டம் புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்மன்னகம கிராம அலுவலர் பிரிவில் இன்று (02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர அமைப்பாளர், பிரதேச சபை உறுப்பினர் இஷாரா சசிகா, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரஜிதா, பிரஜா சக்தி அபிவிருத்தி சபைக் குழுத் தலைவர்கள், புத்தளம் பிரதேச செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு குறித்த வேலைத்திட்டத்தை நாடுபூராகவும் முன்னெடுத்து வருகின்றது.
கிராமிய மக்களின் வறுமையை போக்கும் நோக்கில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 1000 திட்டங்களை இன்று (02) ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சமூக அபிவிருத்தி சபை ஊடாக அடையாளம் காணப்பட்ட உற்பத்தி பொபருளாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் ஜீவனோபாய அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிப்பு செலுத்தும் வேலைத்திட்டங்களுக்கென 25 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
புத்தளத்தில் "ஆயிரம் கிராமங்கள் ஆயிரம் வேலைகள்" தேசிய வேலைத் திட்டம் ஆரம்பம் 'வளமான நாடு - பாதுகாப்பான வாழ்வு' என்ற நோக்கத்துடன் தேசிய மக்கள் சக்தியின் தேசிய இயக்கமான 'பிரஜா சக்தி' திட்டத்தின் கீழ், "ஆயிரம் கிராமங்கள் - ஆயிரம் வேலைகள்" என்ற தேசிய வேலைத் திட்டம் புத்தளம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட தம்மன்னகம கிராம அலுவலர் பிரிவில் இன்று (02) ஆரம்பித்து வைக்கப்பட்டது.தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஜே.எம். பைசல் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் புத்தளம் நகர அமைப்பாளர், பிரதேச சபை உறுப்பினர் இஷாரா சசிகா, புத்தளம் பிரதேச சபை உறுப்பினர் ரஜிதா, பிரஜா சக்தி அபிவிருத்தி சபைக் குழுத் தலைவர்கள், புத்தளம் பிரதேச செயலாளர் உட்பட அரச அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு குறித்த வேலைத்திட்டத்தை நாடுபூராகவும் முன்னெடுத்து வருகின்றது.கிராமிய மக்களின் வறுமையை போக்கும் நோக்கில் பிரஜா சக்தி தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் நாடு முழுவதிலும் 1000 திட்டங்களை இன்று (02) ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சமூக அபிவிருத்தி சபை ஊடாக அடையாளம் காணப்பட்ட உற்பத்தி பொபருளாதாரம், உணவு பாதுகாப்பு மற்றும் ஜீவனோபாய அபிவிருத்திக்கு நேரடியாக பங்களிப்பு செலுத்தும் வேலைத்திட்டங்களுக்கென 25 ஆயிரம் மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நிதி அனைத்து மாவட்டங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.