• Oct 03 2026

திலீபன் சிலை அகற்றல் – ஒலிபெருக்கி பயன்பாடு: நீதிமன்றில் என்ன நடந்தது?

Chithra / Oct 2nd 2026, 8:26 pm
image


தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமை மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் ஒலிபெருக்கி சாதனங்கள் பயன்படுத்தியமை தொடர்பான வழக்குகள் இன்று (02) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.


குறித்த இரு வழக்குகளும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாகவும், உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் மூலமாகவும் அறிந்துகொண்டதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.


இதனையடுத்து, குறித்த வழக்குகளில் ஆஜராகுவதற்காக தாம் உள்ளிட்ட சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்திற்கு சென்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.


எனினும், வழக்கு மன்றில் அழைக்கப்பட்டபோது சந்தேகநபர்களாக எந்தவொரு நபரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை எனவும், ஒலிபெருக்கி சாதனங்களைப் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கிலும் எவரும் அழைக்கப்படவில்லை எனவும் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்தார்.


இதன் காரணமாக, குறித்த வழக்குகளில் தாம் எந்தவிதமான விண்ணப்பங்களையும் முன்வைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.


தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரில் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

திலீபன் சிலை அகற்றல் – ஒலிபெருக்கி பயன்பாடு: நீதிமன்றில் என்ன நடந்தது தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமை மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் ஒலிபெருக்கி சாதனங்கள் பயன்படுத்தியமை தொடர்பான வழக்குகள் இன்று (02) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.குறித்த இரு வழக்குகளும் இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் விசாரணைக்காக அழைக்கப்படவுள்ளதாக ஊடகங்கள் வாயிலாகவும், உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் மூலமாகவும் அறிந்துகொண்டதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்தார்.இதனையடுத்து, குறித்த வழக்குகளில் ஆஜராகுவதற்காக தாம் உள்ளிட்ட சட்டத்தரணிகள் இன்று நீதிமன்றத்திற்கு சென்றிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.எனினும், வழக்கு மன்றில் அழைக்கப்பட்டபோது சந்தேகநபர்களாக எந்தவொரு நபரின் பெயரும் குறிப்பிடப்படவில்லை எனவும், ஒலிபெருக்கி சாதனங்களைப் பயன்படுத்தியமை தொடர்பான வழக்கிலும் எவரும் அழைக்கப்படவில்லை எனவும் சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்தார்.இதன் காரணமாக, குறித்த வழக்குகளில் தாம் எந்தவிதமான விண்ணப்பங்களையும் முன்வைக்கவில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.தியாக தீபம் திலீபனின் உருவச் சிலை அகற்றப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நல்லூரில் தொடர்ச்சியான போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சம்பவங்கள் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement