• Aug 03 2026

நள்ளிரவு ஆலயத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள்; கடைகளிலும் கைவரிசை

Chithra / Aug 2nd 2026, 12:23 pm
image


 

கம்பளை - கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழாத்தோட்டம் பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற தொடர் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.


கலஹா கிழாத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த உண்டியல் மற்றும் வேல் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் இருந்த மேலும் சில பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன.


இதேவேளை, ஆலயத்திற்கு அருகிலுள்ள சிறிய வியாபார நிலையம் ஒன்றும் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸாரும் கம்பளை தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

நள்ளிரவு ஆலயத்துக்குள் நுழைந்த கொள்ளையர்கள்; கடைகளிலும் கைவரிசை  கம்பளை - கலஹா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிழாத்தோட்டம் பகுதியில் நள்ளிரவு இடம்பெற்ற தொடர் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.கலஹா கிழாத்தோட்டம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த உண்டியல் மற்றும் வேல் உள்ளிட்ட பொருட்களை திருடிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனைத் தொடர்ந்து ஆலயத்தில் இருந்த மேலும் சில பொருட்களும் கொள்ளையிடப்பட்டுள்ளன.இதேவேளை, ஆலயத்திற்கு அருகிலுள்ள சிறிய வியாபார நிலையம் ஒன்றும் உடைக்கப்பட்டு, அங்கிருந்த பணம் மற்றும் பொருட்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸாரும் கம்பளை தடயவியல் பொலிஸாரும் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement