• Jul 02 2025

எமது வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, எம்மை தொப்புள்கொடி உறவு எனக் கூறுவதில் பயனில்லை - மீன்பிடி அமைச்சர் தெரிவிப்பு !

shanuja / Jul 1st 2025, 1:39 pm
image

எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, கடல்வளங்களை அழித்துவிட்டு எம்மை தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை என்று  கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.


யாழ்ப்பாணத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.


அவர் மேலும் தெரிவிக்கையில்,  


தமிழக மீனவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


தயவு செய்து எமது கடற்பரப்புக்குள் வரவேண்டாம் என தமிழக மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோல தடைசெய்யப்பட்ட ரோலர் படகு உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் . 


எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, கடல்வளங்களை அழித்துவிட்டு எம்மை தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை. இனியும் அந்த விளையாட்டு வேண்டாம்.

 

தற்போது தமிழக மீனவர்களின் 124 இற்கு மேற்பட்ட இழுவைப்படகுகள் மயிலிட்டியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.- என்றார். 

எமது வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, எம்மை தொப்புள்கொடி உறவு எனக் கூறுவதில் பயனில்லை - மீன்பிடி அமைச்சர் தெரிவிப்பு எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, கடல்வளங்களை அழித்துவிட்டு எம்மை தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை என்று  கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.யாழ்ப்பாணத்தில் நேற்று (30) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவர் மேலும் தெரிவிக்கையில்,  தமிழக மீனவர்கள் மூன்று மாதங்களுக்கு பிறகு மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளனர். படகுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. எமது கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்ததாலேயே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.தயவு செய்து எமது கடற்பரப்புக்குள் வரவேண்டாம் என தமிழக மீனவர்களிடம் கேட்டுக்கொள்கின்றோம். அதேபோல தடைசெய்யப்பட்ட ரோலர் படகு உள்ளிட்டவற்றை பயன்படுத்த வேண்டாம் . எமது மீனவர்களின் வாழ்வாதாரத்தை நாசமாக்கிவிட்டு, கடல்வளங்களை அழித்துவிட்டு எம்மை தொப்புள்கொடி உறவுகள் எனக் கூறுவதில் பயன் இல்லை. இனியும் அந்த விளையாட்டு வேண்டாம். தற்போது தமிழக மீனவர்களின் 124 இற்கு மேற்பட்ட இழுவைப்படகுகள் மயிலிட்டியில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. இவை தொடர்பில் இன்னும் ஓரிரு நாட்களில் நடவடிக்கை எடுக்கப்படும்.- என்றார். 

Advertisement

Advertisement

Advertisement