இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்துள்ளார்.
ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் இந்திய ரயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கத்ரா-ஸ்ரீநகா் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா, ரயிலவே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக இந்திய பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு இன்று சென்றிருந்தார்.
இந்நிலையில் பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணத்தை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
உலகின் உயரமான ரயில்வே பாலம்; ஜம்மு காஷ்மீரில் திறந்துவைத்தார் மோடி இந்தியாவின் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் அமைக்கப்பட்டுள்ள உலகின் உயரமான ரயில்வே பாலத்தை அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்துவைத்துள்ளார். ஜம்மு காஷ்மீரில் செனாப் நதியின் குறுக்கே 359 மீட்டர் உயரத்தில் ஒரு வளைவான பாலம் இந்திய ரயில்வேயால் கட்டி முடிக்கப்பட்டது. இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது. இது உலகின் மிக உயரமான ரயில்வே பாலம் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று சூழலை தாங்கும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜம்மு மற்றும் ஸ்ரீநகர் இடையேயான போக்குவரத்தை மேம்படுத்துவதில் இப்பாலம் முக்கியப் பங்கு வகிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, கத்ரா-ஸ்ரீநகா் இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கிவைத்தார்.இந்த நிகழ்வில் ஜம்மு - காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, முதல்வா் ஒமா் அப்துல்லா, ரயிலவே துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு முதல் முறையாக இந்திய பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீருக்கு இன்று சென்றிருந்தார். இந்நிலையில் பிரதமர் மோடியின் காஷ்மீர் பயணத்தை ஒட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.