• May 23 2026

நடக்கக்கூடாதது நடந்திருச்சு மனசு முழுக்க வலி மட்டும் தான்;கரூர் சம்பவத்திற்குப் பின்னர் மனம் திறந்த விஜய்!

shanu / Sep 30th 2025, 5:00 pm
image

என் வாழ்க்கையில் நடக்கக்கூடாதது நடந்திருச்சு. மனசுமுழுக்க வலி மட்டும் தான் இருக்குது. இதுவரையில் இப்படி ஒரு நிலை என் வாழ்க்கையில் வந்ததில்லை என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் உருக்கமாகப் பேசியுள்ளார். 


கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்த சம்பவம் அனைவரையும் திணறவைத்துள்ளது. 


இந்நிலையில் கரூர் துயரம் குறித்து விஜய் முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில்  வீடியோ பதிவொன்றை  வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். 


அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, 


கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு போனோம். இந்த மாதிரி எதுவுமே நடக்கல, ஆனா கரூர்ல மட்டும் ஏன் இப்படி நடக்குது.


இந்த மாதிரியான ஒரு நிலை என் வாழ்ககையில நான் சந்தித்ததே கிடையாது. மனசு முழுக்க வலி தான் இருக்குது. 


மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருக்காங்க.


கரூரை சேர்ந்த மக்கள் எல்லாம் இந்த உண்மையை வெளியே சொல்லும்போது... எனக்கு கடவுளே நேரில் வந்து சொன்னது போல தோணிச்சு. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்" என்று  உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

நடக்கக்கூடாதது நடந்திருச்சு மனசு முழுக்க வலி மட்டும் தான்;கரூர் சம்பவத்திற்குப் பின்னர் மனம் திறந்த விஜய் என் வாழ்க்கையில் நடக்கக்கூடாதது நடந்திருச்சு. மனசுமுழுக்க வலி மட்டும் தான் இருக்குது. இதுவரையில் இப்படி ஒரு நிலை என் வாழ்க்கையில் வந்ததில்லை என்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் உருக்கமாகப் பேசியுள்ளார். கடந்த சனிக்கிழமை கரூரில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜயின் பிரசாரக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்த சம்பவம் அனைவரையும் திணறவைத்துள்ளது. இந்நிலையில் கரூர் துயரம் குறித்து விஜய் முதல்முறையாக மனம்திறந்து பேசியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில்  வீடியோ பதிவொன்றை  வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ளார். அந்தப் பதிவில் அவர் தெரிவித்துள்ளதாவது, கிட்டத்தட்ட 5 மாவட்டத்துக்கு பிரசாரத்துக்கு போனோம். இந்த மாதிரி எதுவுமே நடக்கல, ஆனா கரூர்ல மட்டும் ஏன் இப்படி நடக்குது.இந்த மாதிரியான ஒரு நிலை என் வாழ்ககையில நான் சந்தித்ததே கிடையாது. மனசு முழுக்க வலி தான் இருக்குது. மக்களுக்கு எல்லா உண்மையும் தெரியும். மக்கள் எல்லாத்தையும் பார்த்துட்டு தான் இருக்காங்க.கரூரை சேர்ந்த மக்கள் எல்லாம் இந்த உண்மையை வெளியே சொல்லும்போது. எனக்கு கடவுளே நேரில் வந்து சொன்னது போல தோணிச்சு. சீக்கிரமே எல்லா உண்மையும் வெளியே வரும்" என்று  உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement