• Jul 08 2025

30 விநாடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது' விமான விபத்தில் உயிர் பிழைத்த பயணியின் திகில் அனுபவம்

Chithra / Jun 13th 2025, 2:37 pm
image

 

ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும், உயிர் பிழைத்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் 11A இருக்கையில் இருந்த நபர் உயிர் பிழைத்ததாக, ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக், ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார். 

விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வாஸ் குமார்  ரமேஷ், 

"விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில், ஒரு பெரிய சத்தம் கேட்டது. பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. அனைத்தும் மிக விரைவாக நடந்தது" என்று கூறியுள்ளார். 


அவர் தனது போர்டிங் பாஸை பகிர்ந்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. அதில் அவரது பெயர் மற்றும் இருக்கை எண் இடம் பெற்றுள்ளது.

ரமேஷின் சகோதரர் நயன் குமார் ரமேஷ் பேசுகையில், 

விஸ்வாஸ் குமார் ரமேஷ் நன்றாக இருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த தனது மற்றொரு சகோதரர் அஜயைப் பற்றி அவர் கவலைப்பட்டார்.


என்ன நடந்தது என்று கேள்விப்பட்டவுடன் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தோம். வாயடைத்துப் போனேன், என்று அவர் கூறினார்.

"அவர் [விஸ்வாஸ் குமார் ரமேஷ்] எப்படி உயிர் பிழைத்தார், எப்படி விமானத்திலிருந்து வெளியேறினார் என்று தெரியவில்லை. அவர் எங்களை அழைத்தபோது, ​​'அஜயைக் கண்டுபிடி, அஜயைக் கண்டுபிடி' என்பது போல, என் மற்ற சகோதரனைப் பற்றி அவர் அதிக கவலைப்பட்டார்.

ரமேஷுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், "அவரது உடல் முழுவதும் பல காயங்கள் இருந்தன. ஆனால் அவர் ஆபத்திலிருந்து மீண்டுவிட்டதாகத் தெரிகிறது" என்று கூறினார்.

இந்தியாவில் பிறந்து 2003-ஆம் ஆண்டில் பிரிட்டனில் குடியேறிய தொழிலதிபரான விஸ்வாஸ் குமார் ரமேஷூக்கு மனைவியும் நான்கு வயது மகனும் உள்ளனர்.  

இந்நிலையில் இந்தியாவில் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான விமானம் குறித்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை நடவடிக்கைகளில் சர்வதேச புலனாய்வாளர்கள் ஈடுபடுவார்கள் என்று நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். 


அமெரிக்க போக்குவரத்துத் துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேரி ஷியாவோ,

இந்தியா முன்னணி புலனாய்வாளராக இருக்கும் என்றும், ஆனால் மற்ற நாடுகளும் இந்த விசாரணையில் தொடர்பில் இருக்கும் என தெரிவித்துள்ளார். 

குறித்த விமானம் லண்டனுக்குச் செல்லவிருந்ததால், பிரித்தானிய மற்றும் விமானத்தில் இருந்த பிற நாடுகளும் விசாரணையில் பங்கேற்கும் என்று அவர் கூறியுள்ளார்.


30 விநாடிகளில் எல்லாம் முடிந்துவிட்டது' விமான விபத்தில் உயிர் பிழைத்த பயணியின் திகில் அனுபவம்  ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த 242 பேரில் ஒரே ஒருவரைத் தவிர மற்ற அனைவரும் உயிரிழந்துவிட்டதாகவும், உயிர் பிழைத்த நபர் பிரிட்டிஷ் குடிமகன் என்றும் அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஏர் இந்தியா வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட போயிங் 787-8 விமானத்தில் 11A இருக்கையில் இருந்த நபர் உயிர் பிழைத்ததாக, ஆமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக், ஏஎன்ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார். விபத்து நடைபெற்ற இடத்தில் இருந்து மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த விஸ்வாஸ் குமார்  ரமேஷ், "விமானம் புறப்பட்ட 30 விநாடிகளில், ஒரு பெரிய சத்தம் கேட்டது. பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. அனைத்தும் மிக விரைவாக நடந்தது" என்று கூறியுள்ளார். அவர் தனது போர்டிங் பாஸை பகிர்ந்து கொண்டதாக ஊடகங்கள் தெரிவித்தன. அதில் அவரது பெயர் மற்றும் இருக்கை எண் இடம் பெற்றுள்ளது.ரமேஷின் சகோதரர் நயன் குமார் ரமேஷ் பேசுகையில், விஸ்வாஸ் குமார் ரமேஷ் நன்றாக இருப்பதைப் பார்ப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, ஆனால் விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்த தனது மற்றொரு சகோதரர் அஜயைப் பற்றி அவர் கவலைப்பட்டார்.என்ன நடந்தது என்று கேள்விப்பட்டவுடன் நாங்கள் அனைவரும் அதிர்ச்சியில் இருந்தோம். வாயடைத்துப் போனேன், என்று அவர் கூறினார்."அவர் [விஸ்வாஸ் குமார் ரமேஷ்] எப்படி உயிர் பிழைத்தார், எப்படி விமானத்திலிருந்து வெளியேறினார் என்று தெரியவில்லை. அவர் எங்களை அழைத்தபோது, ​​'அஜயைக் கண்டுபிடி, அஜயைக் கண்டுபிடி' என்பது போல, என் மற்ற சகோதரனைப் பற்றி அவர் அதிக கவலைப்பட்டார்.ரமேஷுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர், "அவரது உடல் முழுவதும் பல காயங்கள் இருந்தன. ஆனால் அவர் ஆபத்திலிருந்து மீண்டுவிட்டதாகத் தெரிகிறது" என்று கூறினார்.இந்தியாவில் பிறந்து 2003-ஆம் ஆண்டில் பிரிட்டனில் குடியேறிய தொழிலதிபரான விஸ்வாஸ் குமார் ரமேஷூக்கு மனைவியும் நான்கு வயது மகனும் உள்ளனர்.  இந்நிலையில் இந்தியாவில் புறப்பட்டு சிறிது நேரத்திலேயே விபத்துக்குள்ளான விமானம் குறித்து ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணை நடவடிக்கைகளில் சர்வதேச புலனாய்வாளர்கள் ஈடுபடுவார்கள் என்று நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க போக்குவரத்துத் துறையின் முன்னாள் இன்ஸ்பெக்டர் ஜெனரல் மேரி ஷியாவோ,இந்தியா முன்னணி புலனாய்வாளராக இருக்கும் என்றும், ஆனால் மற்ற நாடுகளும் இந்த விசாரணையில் தொடர்பில் இருக்கும் என தெரிவித்துள்ளார். குறித்த விமானம் லண்டனுக்குச் செல்லவிருந்ததால், பிரித்தானிய மற்றும் விமானத்தில் இருந்த பிற நாடுகளும் விசாரணையில் பங்கேற்கும் என்று அவர் கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement

Buy Now