கட்டுநாயக்க - தேவமொட்டாவ பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரியைச் சுட்டுக் காயப்படுத்திய சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மினுவாங்கொடை - தேவொலபொல பகுதியில் வைத்து மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை, பொலிஸ் அதிகாரிகள் இருவர் பின்தொடர்ந்து சென்று, தேவமொட்டாவ பகுதியில் வைத்து வழிமறித்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அவரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.
இதன்போது, சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் சற்றுத் தூரம் சென்றுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சந்தேகநபர், மற்றுமொரு அதிகாரியிடம் இருந்த கடமைநேரத் துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு வேறொரு மோட்டார் சைக்கிளில் தப்பியோடியிருந்தார்.
இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த சந்தேகநபரைத் தேடி பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் பலனாக, மினுவாங்கொடை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
பொலிஸ் அதிகாரியைச் சுட்டுக் காயப்படுத்திய சந்தேகநபர் சிக்கினார் கட்டுநாயக்க - தேவமொட்டாவ பகுதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில், பொலிஸ் அதிகாரியைச் சுட்டுக் காயப்படுத்திய சந்தேகநபர் நேற்று இரவு கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மினுவாங்கொடை - தேவொலபொல பகுதியில் வைத்து மேற்படி சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகத்துக்கிடமான முறையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரை, பொலிஸ் அதிகாரிகள் இருவர் பின்தொடர்ந்து சென்று, தேவமொட்டாவ பகுதியில் வைத்து வழிமறித்தனர். அவரிடம் தீவிர விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், அவரைக் கைது செய்து பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுத்தனர்.இதன்போது, சந்தேகநபர் வந்த மோட்டார் சைக்கிளை எடுப்பதற்காக பொலிஸ் அதிகாரி ஒருவர் சற்றுத் தூரம் சென்றுள்ளார். அந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்ட சந்தேகநபர், மற்றுமொரு அதிகாரியிடம் இருந்த கடமைநேரத் துப்பாக்கியைப் பறித்து, அவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு வேறொரு மோட்டார் சைக்கிளில் தப்பியோடியிருந்தார்.இந்தத் துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த பொலிஸ் அதிகாரி உடனடியாக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.சம்பவத்தைத் தொடர்ந்து தலைமறைவாகியிருந்த சந்தேகநபரைத் தேடி பொலிஸார் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் பலனாக, மினுவாங்கொடை பகுதியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.