• Oct 14 2026

கல்லடி பாலத்தில் கிடந்த காலணி, கைப்பை - யுவதி எடுத்த முடிவு!அடுத்த நொடியில் நடந்த சம்பவம்

Chithra / Oct 14th 2026, 12:34 pm
image


மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த 19 வயதுடைய யுவதி ஒருவர், மீனவர்களின் துரித நடவடிக்கையால் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.


குறித்த சம்பவம் நேற்று (13) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


கல்லடி பழைய பாலத்திற்கு வருகை தந்த யுவதி, தனது காலணி, கைப்பை மற்றும் குடை ஆகியவற்றைப் பாலத்தில் வைத்துவிட்டு வாவியில் குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


இதனை அவதானித்த வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், உடனடியாகச் செயற்பட்டு யுவதியை நீரிலிருந்து மீட்டு பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.


இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், 1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் யுவதியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.


மீட்கப்பட்ட 19 வயதுடைய யுவதி வேறொரு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


அவர் வாவியில் குதித்தமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


இதேவேளை, கடந்த மாதமும் கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியிருந்தது.


மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 90 பேர் தற்கொலை காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் மாவட்டப் பிரிவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

கல்லடி பாலத்தில் கிடந்த காலணி, கைப்பை - யுவதி எடுத்த முடிவுஅடுத்த நொடியில் நடந்த சம்பவம் மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த 19 வயதுடைய யுவதி ஒருவர், மீனவர்களின் துரித நடவடிக்கையால் உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.குறித்த சம்பவம் நேற்று (13) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.கல்லடி பழைய பாலத்திற்கு வருகை தந்த யுவதி, தனது காலணி, கைப்பை மற்றும் குடை ஆகியவற்றைப் பாலத்தில் வைத்துவிட்டு வாவியில் குதித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இதனை அவதானித்த வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள், உடனடியாகச் செயற்பட்டு யுவதியை நீரிலிருந்து மீட்டு பாதுகாப்பாகக் கரைக்குக் கொண்டு வந்துள்ளனர்.இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வருகை தந்த பொலிஸார், 1990 சுவசெரிய அவசர அம்புலன்ஸ் சேவையின் உதவியுடன் யுவதியை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர்.மீட்கப்பட்ட 19 வயதுடைய யுவதி வேறொரு பிரதேசத்தைச் சேர்ந்தவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.அவர் வாவியில் குதித்தமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.இதேவேளை, கடந்த மாதமும் கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பதிவாகியிருந்தது.மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் ஒக்டோபர் 12ஆம் திகதி வரையான காலப்பகுதியில் 90 பேர் தற்கொலை காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸ் மாவட்டப் பிரிவின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

Advertisement