• Feb 10 2026

சிங்கபுர குப்பைமேட்டு பிரச்சினைக்கு தம்பலகாமம் பிரதேச சபையால் தீர்வு!

dileesiya / Jan 23rd 2026, 3:07 pm
image

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட சிங்கபுர பகுதியில் குப்பைமேடு காரணமாக பலர் துர்நாற்றம் வீசுவதாக தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலியிடம் முறையிட்டனர். 


இதனை தம்பலகாமம் பிரதேச சபைக்கு சொந்தமான கழிவுகளை சேகரிக்கும் பகுதியானது திருகோணமலை கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ளதுடன் இதனை அண்டிய பத்தினிபுரம்,பாலம்போட்டாறு,இக்பால் நகர் போன்ற கிராம மக்கள் இதன் மூலம் ஏற்படும் துர்நாற்றம் தொடர்பில் பல முறைப்பாடுகளை முன்வைத்தனர்.


இதனை அடுத்து குறித்த பகுதி தவிசாளர் தலைமையில் விசேடமாக புதிய திட்டமிடலுடன் ஒழுங்குபடுத்தப்பட்டு துர்நாற்றம் கட்டுப்பாட்டுக்குல் கொண்டுவரப்பட்டது.


இது  தொடர்பில் உரிய பகுதிக்கு இன்று (23)  விஜயம் செய்த தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி இவ்வாறு தெரிவித்தார்.


கடந்த காலங்களில் மிக மோசமான துர்நாற்றத்தை மக்கள் சந்தித்தார்கள் தற்போது புதிய திட்டமிடல் நடவடிக்கை காரணமாக துர்நாற்றத்தை கட்டுப்படுத்தியுள்ளோம்.


மீள் சுழற்சி தொடர்பான நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் அமுல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். 


இது தொடர்பில் பொது மக்கள்,அரச அதிகாரிகள் என பலர் என்னிடம் குப்பைமேடு காரணமாக துர்நாற்றம் வீசுவதாக முறையிட்டார்கள் துரித நடவடிக்கையாக துர்நாற்றத்தை கட்டுப்படுத்தியுள்ளோம் என்றார்.

சிங்கபுர குப்பைமேட்டு பிரச்சினைக்கு தம்பலகாமம் பிரதேச சபையால் தீர்வு திருகோணமலை தம்பலகாமம் பிரதேச சபைக்குட்பட்ட சிங்கபுர பகுதியில் குப்பைமேடு காரணமாக பலர் துர்நாற்றம் வீசுவதாக தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலியிடம் முறையிட்டனர். இதனை தம்பலகாமம் பிரதேச சபைக்கு சொந்தமான கழிவுகளை சேகரிக்கும் பகுதியானது திருகோணமலை கண்டி பிரதான வீதியில் அமைந்துள்ளதுடன் இதனை அண்டிய பத்தினிபுரம்,பாலம்போட்டாறு,இக்பால் நகர் போன்ற கிராம மக்கள் இதன் மூலம் ஏற்படும் துர்நாற்றம் தொடர்பில் பல முறைப்பாடுகளை முன்வைத்தனர்.இதனை அடுத்து குறித்த பகுதி தவிசாளர் தலைமையில் விசேடமாக புதிய திட்டமிடலுடன் ஒழுங்குபடுத்தப்பட்டு துர்நாற்றம் கட்டுப்பாட்டுக்குல் கொண்டுவரப்பட்டது.இது  தொடர்பில் உரிய பகுதிக்கு இன்று (23)  விஜயம் செய்த தம்பலகாமம் பிரதேச சபையின் தவிசாளர் எச்.தாலிப் அலி இவ்வாறு தெரிவித்தார்.கடந்த காலங்களில் மிக மோசமான துர்நாற்றத்தை மக்கள் சந்தித்தார்கள் தற்போது புதிய திட்டமிடல் நடவடிக்கை காரணமாக துர்நாற்றத்தை கட்டுப்படுத்தியுள்ளோம்.மீள் சுழற்சி தொடர்பான நடவடிக்கைகளையும் எதிர்காலத்தில் அமுல்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்தார். இது தொடர்பில் பொது மக்கள்,அரச அதிகாரிகள் என பலர் என்னிடம் குப்பைமேடு காரணமாக துர்நாற்றம் வீசுவதாக முறையிட்டார்கள் துரித நடவடிக்கையாக துர்நாற்றத்தை கட்டுப்படுத்தியுள்ளோம் என்றார்.

Advertisement

Advertisement

Advertisement