நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு உள்நாட்டு கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த கடை உரிமையாளர் ஒருவருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்காசிங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.
உள்நாட்டு கீரி சம்பா அரிசி ஒரு கிலோவின் கட்டுப்பாட்டு விலை 260 ரூபாயாக இருக்கும் நிலையில், குறித்த வர்த்தகர் அதனை 360 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில், சட்டத்தை மீறியமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த கடை உரிமையாளருக்கு சிக்கல் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச சில்லறை விலையை விட அதிக விலைக்கு உள்நாட்டு கீரி சம்பா அரிசியை விற்பனை செய்த கடை உரிமையாளர் ஒருவருக்கு, ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்து மஹர நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மஹர மேலதிக நீதவான் பண்டார இலங்காசிங்க முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.உள்நாட்டு கீரி சம்பா அரிசி ஒரு கிலோவின் கட்டுப்பாட்டு விலை 260 ரூபாயாக இருக்கும் நிலையில், குறித்த வர்த்தகர் அதனை 360 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் முன்வைத்த ஆதாரங்களின் அடிப்படையில், சட்டத்தை மீறியமைக்காக இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.