• Jun 15 2025

யாசகப் பெண் மீது பரிதாபம் கொண்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

Chithra / Jun 15th 2025, 11:37 am
image


வீடொன்றில் கைபேசியை திருடிய குற்றச்சாட்டில் யாசகப் பெண்ணொருவரை வாழைச்சேனை பொலிஸார்  எச்சரித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் 

ஓட்டமாவடி - 3 ஆம் வட்டாரத்தில் யாசகம் கேட்டு வீடுவீடாக சென்ற பெண்ணொருவர் வீட்டிலிருந்த பெண்ணிடம் தேனீர் கேட்டுள்ளார்.

வீட்டிலிருந்த பெண் யாசகப் பெண் மீது பரிதாபம் கொண்டு, தேனீர் தயாரிக்கச் சென்ற போது அங்கிருந்த கைபேசியை சூட்சமமாக திருடிச் சென்றுள்ளார்.

இவ்வாறு கைபேசியை திருடிச் சென்ற யாசகப் பெண், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வீ. கெமரா மூலம் அடையாளம் காணப்பட்டார்.

அடையாளம் காணப்பட்ட யாசகப் பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த பெண் திருடிய கைபேசியை பொலிஸார் உரிமையாளரிடம் ஒப்படைத்து, திருடிய பெண்ணுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு யாசகம் கேட்டு வரும் சிலரால் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டள்ளனர். 

யாசகப் பெண் மீது பரிதாபம் கொண்ட பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி வீடொன்றில் கைபேசியை திருடிய குற்றச்சாட்டில் யாசகப் பெண்ணொருவரை வாழைச்சேனை பொலிஸார்  எச்சரித்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் ஓட்டமாவடி - 3 ஆம் வட்டாரத்தில் யாசகம் கேட்டு வீடுவீடாக சென்ற பெண்ணொருவர் வீட்டிலிருந்த பெண்ணிடம் தேனீர் கேட்டுள்ளார்.வீட்டிலிருந்த பெண் யாசகப் பெண் மீது பரிதாபம் கொண்டு, தேனீர் தயாரிக்கச் சென்ற போது அங்கிருந்த கைபேசியை சூட்சமமாக திருடிச் சென்றுள்ளார்.இவ்வாறு கைபேசியை திருடிச் சென்ற யாசகப் பெண், அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.ரி.வீ. கெமரா மூலம் அடையாளம் காணப்பட்டார்.அடையாளம் காணப்பட்ட யாசகப் பெண் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.குறித்த பெண் திருடிய கைபேசியை பொலிஸார் உரிமையாளரிடம் ஒப்படைத்து, திருடிய பெண்ணுக்கு பொலிஸாரால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு யாசகம் கேட்டு வரும் சிலரால் திருட்டுச் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதுதொடர்பில் அவதானமாக இருக்குமாறு பொலிஸார் பொதுமக்களை கேட்டுக் கொண்டள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement