• Jun 14 2026

கடும் காற்றின் கோரத் தாக்கம்; மரங்கள் முறிந்து, கடைகள் சேதம்; மின்தூண்கள் சாய்வு

Chithra / Jun 12th 2026, 1:34 pm
image

நாட்டில் நிலவி வரும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையால் கிளிநொச்சி மாவட்டத்திலும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.


இன்று (12.06.2026) கிளிநொச்சி பரந்தன் பொதுச் சந்தைப் பகுதியில் வீசிய கடும் காற்றின் காரணமாக, அங்கிருந்த பாலைமரம் ஒன்று முறிந்து அருகிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது வீழ்ந்துள்ளது.


இந்தச் சம்பவத்தினால் குறித்த வர்த்தக நிலையம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, மரம் விழுந்ததன் காரணமாக வர்த்தக நிலையத்தின் வழக்கமான வணிக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.


இதேவேளை கண்டி ஹந்தானை வழியாக கலஹா நோக்கிச் செல்லும் பிரதான வீதியின் உடுவெல பகுதியில் இன்று (12) காலை பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.


கடும் மழை மற்றும் பலத்த காற்றின் தாக்கம் காரணமாக இந்த மரம் வீதியின் மீது சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அமைந்திருந்த பாரிய மின்சார தூண்களும் உடைந்து சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்துக்கும் மின்விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவசர சேவைப் பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், வீதியை சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.


தொடர்ந்து நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு மரங்களுக்கு அருகிலும் அபாயகரமான பகுதிகளிலும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.


கடும் காற்றின் கோரத் தாக்கம்; மரங்கள் முறிந்து, கடைகள் சேதம்; மின்தூண்கள் சாய்வு நாட்டில் நிலவி வரும் காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலையால் கிளிநொச்சி மாவட்டத்திலும் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.இன்று (12.06.2026) கிளிநொச்சி பரந்தன் பொதுச் சந்தைப் பகுதியில் வீசிய கடும் காற்றின் காரணமாக, அங்கிருந்த பாலைமரம் ஒன்று முறிந்து அருகிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் மீது வீழ்ந்துள்ளது.இந்தச் சம்பவத்தினால் குறித்த வர்த்தக நிலையம் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேவேளை, மரம் விழுந்ததன் காரணமாக வர்த்தக நிலையத்தின் வழக்கமான வணிக நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.இதேவேளை கண்டி ஹந்தானை வழியாக கலஹா நோக்கிச் செல்லும் பிரதான வீதியின் உடுவெல பகுதியில் இன்று (12) காலை பாரிய மரம் ஒன்று முறிந்து வீழ்ந்துள்ளது.கடும் மழை மற்றும் பலத்த காற்றின் தாக்கம் காரணமாக இந்த மரம் வீதியின் மீது சரிந்து விழுந்ததாக தெரிவிக்கப்படுகிறது.இந்த சம்பவத்தால் அப்பகுதியில் அமைந்திருந்த பாரிய மின்சார தூண்களும் உடைந்து சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக போக்குவரத்துக்கும் மின்விநியோகத்திற்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவசர சேவைப் பிரிவினர் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன், வீதியை சீரமைக்கும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.தொடர்ந்து நிலவும் மோசமான வானிலையைக் கருத்தில் கொண்டு மரங்களுக்கு அருகிலும் அபாயகரமான பகுதிகளிலும் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement