தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அவரது வீட்டிற்கு சற்றுமுன்னர் சென்றுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடனும் நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நேற்று முதலமைச்சராகப் பதவியேற்றார்.
பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து இன்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இடம்பெற்றது. அதில் பெரம்பூர் எம்.எல்.ஏ வாக முதலமைச்சர் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து அவரது தலைமையில் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர்களும் எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்றனர்.
சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் சற்றுமுன்னர் முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
அங்கு சென்ற அவரை வீட்டு வாசலில் இருந்து உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து உள்ளே சென்ற முதலமைச்சர் விஜயை, மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வரவேற்றார்.
பின்னர் ஒருவருக்கொருவர் பொன்னாடை போற்றி கௌரவிப்பைப் பகிர்ந்துள்ளனர். பதவியேற்பைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினைப் பார்க்க அவரது வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்ற சம்பவம் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்டாலினை தேடிப்போன விஜய் கட்டித்தழுவிய காட்சி - உதயநிதி கொடுத்த பரிசு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்திக்க அவரது வீட்டிற்கு சற்றுமுன்னர் சென்றுள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு தனிப்பெரும்பான்மையுடனும் நீண்ட இழுபறிக்குப் பின்னர் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் நேற்று முதலமைச்சராகப் பதவியேற்றார். பதவியேற்பு விழாவைத் தொடர்ந்து இன்று தமிழக சட்டமன்ற கூட்டத்தொடர் இடம்பெற்றது. அதில் பெரம்பூர் எம்.எல்.ஏ வாக முதலமைச்சர் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து அவரது தலைமையில் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட உறுப்பினர்களும் எம்.எல்.ஏக்களாகப் பதவியேற்றனர். சட்டமன்ற கூட்டத்தொடர் முடிவடைந்த பின்னர் சற்றுமுன்னர் முதலமைச்சர் விஜய் முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்திக்க அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார். அங்கு சென்ற அவரை வீட்டு வாசலில் இருந்து உதயநிதி ஸ்டாலின் வரவேற்றார். அதனைத் தொடர்ந்து உள்ளே சென்ற முதலமைச்சர் விஜயை, மு.க.ஸ்டாலின் கட்டியணைத்து வரவேற்றார். பின்னர் ஒருவருக்கொருவர் பொன்னாடை போற்றி கௌரவிப்பைப் பகிர்ந்துள்ளனர். பதவியேற்பைத் தொடர்ந்து மு.க.ஸ்டாலினைப் பார்க்க அவரது வீட்டிற்கு முதலமைச்சர் விஜய் சென்ற சம்பவம் தற்போது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.