• May 23 2026

சிறுவர் தினத்தை கொண்டாடி பரிசுகளுடன் வீடு திரும்பிய நான்கு வயது சிறுவனுக்கு நடந்த சோகம்

Chithra / Oct 2nd 2025, 12:38 pm
image

கொழும்பு- நவகமுவ - கடுவெல பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து 04 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. 

இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சிறுவன் நவகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற உலக சிறுவர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.

பின்னர் சிறுவன் வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்துள்ள நிலையில், பெற்றொரின் அவதானத்தை கடந்து வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்று பக்கம் சென்றுள்ளார்.


இதன்போது சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

உயிரிழந்த சிறுவன் 04 வயதுடைய  சேனுகா நில்ஷான் ஹெட்டியாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 


சிறுவர் தினத்தை கொண்டாடி பரிசுகளுடன் வீடு திரும்பிய நான்கு வயது சிறுவனுக்கு நடந்த சோகம் கொழும்பு- நவகமுவ - கடுவெல பகுதியில் உள்ள வீடொன்றின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்றில் விழுந்து 04 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ள துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக நவகமுவ பொலிஸார் தெரிவித்தனர்.இந்த சிறுவன் நவகமுவ பிரதேசத்தில் நடைபெற்ற உலக சிறுவர் தின கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பரிசுகளை வென்று மீண்டும் வீடு திரும்பியுள்ளார்.பின்னர் சிறுவன் வீட்டினுள் விளையாடிக்கொண்டிருந்துள்ள நிலையில், பெற்றொரின் அவதானத்தை கடந்து வீட்டின் பின்புறத்தில் அமைந்துள்ள கிணற்று பக்கம் சென்றுள்ளார்.இதன்போது சிறுவன் கிணற்றில் விழுந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.உயிரிழந்த சிறுவன் 04 வயதுடைய  சேனுகா நில்ஷான் ஹெட்டியாராச்சி என அடையாளம் காணப்பட்டுள்ளார்.இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நவகமுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement