• May 22 2026

துர்நாற்றம் வீசிய தேங்காய் எண்ணை - சுற்றிவளைப்பில் அதிர்ச்சி

Chithra / May 22nd 2026, 2:00 pm
image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணையின் தரம் தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், அப்பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை (22.05.2026) குறித்த வர்த்தக நிலையத்தில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.


சோதனையின் போது துர்நாற்றம் வீசும் நிலையிலும், நிறம் மாறியதோடு சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 18 கலன்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணை கண்டறியப்பட்டது. மேலும் அவற்றில் உரிய சுட்டுத்துண்டுகள் மற்றும் அடையாள விவரங்கள் இல்லாததும் தெரியவந்தது.


இதையடுத்து குறித்த 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதுடன், களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.


இந்த வழக்கின் அடிப்படையில் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு 40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் கைப்பற்றப்பட்ட தேங்காய் எண்ணை உடனடியாக அழிக்கப்பட்டதாகவும் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த. கஜனன் தெரிவித்துள்ளார்.


துர்நாற்றம் வீசிய தேங்காய் எண்ணை - சுற்றிவளைப்பில் அதிர்ச்சி மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட வர்த்தக நிலையம் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட தேங்காய் எண்ணையின் தரம் தொடர்பாக பொதுமக்கள் வழங்கிய முறைப்பாட்டைத் தொடர்ந்து விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.பொதுமக்களிடமிருந்து கிடைத்த முறைப்பாடுகளின் அடிப்படையில், அப்பகுதிக்குப் பொறுப்பான பொது சுகாதார பரிசோதகர்கள் அடங்கிய குழுவினர் இன்று வெள்ளிக்கிழமை (22.05.2026) குறித்த வர்த்தக நிலையத்தில் திடீர் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.சோதனையின் போது துர்நாற்றம் வீசும் நிலையிலும், நிறம் மாறியதோடு சுகாதார சீர்கேடுகளுடன் காணப்பட்ட 18 கலன்களில் சேமித்து வைக்கப்பட்டிருந்த 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணை கண்டறியப்பட்டது. மேலும் அவற்றில் உரிய சுட்டுத்துண்டுகள் மற்றும் அடையாள விவரங்கள் இல்லாததும் தெரியவந்தது.இதையடுத்து குறித்த 286 கிலோ கிராம் தேங்காய் எண்ணை அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டதுடன், களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகரால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.இந்த வழக்கின் அடிப்படையில் வர்த்தக நிலைய உரிமையாளருக்கு 40,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதாகவும், நீதிமன்ற உத்தரவின் பேரில் கைப்பற்றப்பட்ட தேங்காய் எண்ணை உடனடியாக அழிக்கப்பட்டதாகவும் களுவாஞ்சிகுடி பொது சுகாதார பரிசோதகர் த. கஜனன் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement